Goondas act
செ.வெ.எண்:-54/2024
நாள்:-20.12.2024
திண்டுக்கல் மாவட்டம்
செயின் மற்றும் பணம் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை தடுப்புக்காவலில் வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், ஒடுக்கம், நல்லாம்பட்டி, யாகப்பன்பட்டி பிரிவு, பத்திரகாளியம்மன் தோட்டத்து வீடு என்ற முகவரியைச் சேர்ந்த பூபதி என்பவரது மகன் உதயா என்ற உதயக்குமார்(வயது 30) என்பவர் கடந்த 02.12.2024 அன்று திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பைபாஸ் அருகில் ஒரு நபரை கத்தி முனையில் மிரட்டி தங்கச் செயினை பறித்த குற்றத்திற்காக தாடிக்கொம்பு காவல் நிலையத்தினரால் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதயா என்ற உதயக்குமார் என்பவர் மேற்சொன்ன வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், திண்டுக்கல் மேற்கு வட்டம், ரெட்டியார்சத்திரம் அஞ்சல், சில்வார்பட்டி கிராமம், கதிரையன்குளம் என்ற முகவரியைச் சேர்ந்த பிச்சைத் தேவர் என்பவரது மகன் ராஜசேகர்(வயது 36) என்பவர் கடந்த 23.11.2024 அன்று திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் ஒரு நபரை கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தினரால் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜசேகர் என்பவர் மேற்சொன்ன வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது திண்டுக்கல் மாவட்ட சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
உதயா என்ற உதயக்குமார் மற்றும் ராஜசேகர் ஆகியோரை தடுப்புக்காவலில் வைக்கக் கேட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., அவர்களால் அளிக்கப்பட்ட பரிந்துரையை ஏற்று இருவரையும் தடுப்புக்காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இஆ.ப., அவர்கள் உத்தரவிட்டதையடுத்து, இருவரும் மதுரை மத்திய சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.