Anna Cycle Race
செ.வெ.எண்:-71/2024
நாள்:-27.12.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி 04.01.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் பிரிவில் 2024-25 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி 04.01.2025 அன்று காலை 7.00 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியானது, 13 வயது, 15 வயது மற்றும் 17 வயது என 3 பிரிவுகளில் நடத்தப்படவுள்ளது. 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீட்டர் துாரம், மாணவிகளுக்கு 10 கி.மீட்டர் துாரம், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீட்டர் துாரம், மாணவிகளுக்கு 15 கி.மீட்டர் துாரம், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீட்டர் துாரம், மாணவிகளுக்கு 15 கி.மீட்டர் துாரம் போட்டிகள் நடைபெறும்.
அண்ணா மிதிவண்டி போட்டியில் பங்கு பெற விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியையிடம் வயது சான்றிதழ் கண்டிப்பாக பெற்று வருதல் வேண்டும்.
இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ.5000, 2-ஆம் இடம் ரூ.3000, 3-ஆம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.2000 மற்றும் 4 முதல் 10-ஆம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.250 வீதம் பரிசு தொகை (காசோலையாக) மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல்–624 004 என்ற முகவரியில் நேரிலோ அல்லது கைப்பேசி எண் – 7401703504 வாயிலாகவோ சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.