Collector Inspection – (Agri dept and West Thasildar Office)

செ.வெ.எண்:-02/2025
நாள்:-01.04.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(01.04.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் ரூ.3.85 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலக கட்டடம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, திண்டுக்கல் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் திண்டுக்கல் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் 1993 ஆண்டு தொடங்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த உரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் மூன்று வேளாண்மை அலுவலர்கள், ஒரு ஆய்வக உதவியாளர்கள் மற்றும் ஒரு தினக்கூலி பணியாளர்கள் பணியாற்றி வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.
மேலும், திண்டுக்கல் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்திற்கு விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து உரம் மாதிரிகள் வேளாண்மை அலுவலர்கள் மூலம் அனுப்பப்படுகின்றன. திண்டுக்கல் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் செப்டம்பர் 6-ந் தேதி 2025-ல் NABL Accreditation (ISO17025 : 2017) for Testing பெற்றது. அதன் மூலம் Scope Sample களின் ஆய்வு அறிக்கைகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. உரக்கட்டுப்பாட்டு ஆய்வக உபகரணங்கள் (Calibration) செய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகின்றன. ஆண்டிற்கு சராசரியாக 1500 உரம் மாதிரிகளை ஆய்வு செய்து ஆய்வு அறிக்கையானது உரிய நேரத்தில் FCO 1985-ன்படி L Form-ல் (ஆய்வு முடிவு அறிக்கை) வழங்கப்படுகிறது. ஆய்வு செய்து முடிக்கப்பட்ட உரம் மாதிரிகள் திண்டுக்கல் உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் ஆய்வு முடித்து 6 மாதங்கள் கழித்து விவசாயிகளுக்கு ஏலம் விடப்படுகிறது என்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) திரு.பாண்டியன், செயற்பெறியாளர் திரு.தங்கவேல், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ் உட்பட பலர் உடனிருந்தனர்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.