Junior World Cup
செ.வெ.எண்:-69/2025
நாள்: 16.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
இளையோர் உலகக்கோப்பைப் போட்டிக்கான வெற்றி கோப்பையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் வரவேற்றார்கள்
திண்டுக்கல் புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளையோர் உலகக்கோப்பைப் போட்டிக்கான வெற்றி கோப்பையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் இன்று(16.11.2025) வரவேற்றார்கள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டிக்கான வெற்றி கோப்பையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் 05.11.2025 அன்று அறிமுகப்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், 10.11.2025 அன்று சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் சின்னமான காங்கேயனை அறிமுகப்படுத்தி, உலக கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பையின் தமிழ்நாடு முழுவதற்குமான சுற்றுப்பயணத்தை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
2025-ஆம் ஆண்டுக்கான ஹாக்கி ஆடவர் ஜுனியர் உலக கோப்பை போட்டிகள் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பால் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டியானது எதிர்வரும் 28.11.2025 முதல் 10.12.2025 வரை தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் முதல் முறையாக 24 நாடுகள் பங்கேற்க உள்ளது.
இப்போட்டிக்கான வெற்றிக் கோப்பை விளம்பரப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோப்பை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இக்கோப்பை சுற்றுப்பயணம் கன்னியாகுமரி தொடங்கி தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களுக்கு வருகை புரிகிறது. இன்று தேனி மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிகிறது. பின்னர் திண்டுக்கல்லில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்கிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று(16.11.2025) புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தடைந்தது.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி ஜோ.இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.ஆர்.சிவா, திரு.காஜா மைதீன், திண்டுக்கல் ஹாக்கி சங்க தலைவர் திரு.விஷால் அர்ஜீன், செயலாளர் திரு.ஜோன் சிங்ஸ்சன், திண்டுக்கல் கால்பந்து சங்க செயலாளர் திரு.சண்முகம், திரு.ரமேஷ் பட்டேல், நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.