Close

DRUG PLEDGE (NMBA)

Publish Date : 19/11/2025
.

செ.வெ.எண்:-82/2025

நாள்:-18.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நாஷா முக்த் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நாஷா முக்த் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.11.2025) தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போதைப் பொருள் பயன்பாட்டினை ஒழிக்கும் நோக்கத்திற்காக நாஷா முக்த் பாரத் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் அமைச்சகத்தின் மூலம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் 5-ஆம் ஆண்டு விழா தேசிய அளவில் இன்றைய தினம் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

நாஷா முக்த் பாரத் அபியான் மக்களைச் சென்றடைந்து போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், பள்ளிகள் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. சமுதாயத்தில் ஒழுக்கம் என்பது மிக மிக முக்கியமானதாகும். ஒழுக்கம் இருந்தால்தான் நாம் வாழ்வில் உயர்நிலைக்கு செல்ல முடியும். பள்ளிகளுக்கு அருகில், உயர்கல்வி நிறுவனங்கள் அருகில், பல்கலைக்கழக வளாகங்கள் போதைப்பொருள் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்கும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

மேலும், ஆசிரியர் பெருமக்களாகிய தாங்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போதைப்பொருள் உயயோகத்தினால் வரும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். மாணவச் செல்வங்களாகிய நீங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களோ, தங்கள் வீட்டுற்கு அருகாமையில் உள்ள குடும்ப உறுப்பினர்களோ மற்றும் நண்பர்களோ போதைப்பொருள் உயயோகிப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு போதைப்பொருள் உபயோகிப்பதால் வரும் தீமைகள் குறித்து எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் குழந்தைகள் நலன் தொடர்புடைய அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், நாஷா முக்த் பாரத் அபியான் தன்னார்வலர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், பஞ்சாயத்துராஜ் நிறுவனங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்..

மேலும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு மது மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த மடிப்பேடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.பா.சத்தியநாராயணன், நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. தே.ஜெயந்தி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் (காவல் துறை) திருமதி.மகாலட்சுமி, திருமதி.அருணா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக, பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) திரு.அ.சக்திவேல், சிறப்பு சிறார் காவல் பிரிவு சமூகப்பணியாளர் திரு.லோ.ஜெரோம் லாசரஸ், குழந்தை உதவி மைய ஒருங்கிணைப்பாளர் திரு.நிக்கோலஸ், பள்ளி ஆசிரியர் பெருமக்கள், 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.