Close

The Hon’ble Rural Development minister-Dindigul Bus

Publish Date : 25/11/2025
.

செ.வெ.எண்:-94/2025

நாள்:-24.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், 3 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் 3 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (24.11.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அரசின் திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போக்குவரத்துத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து, அதிக நிதி ஒதுக்கீடு செய்து, குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதியை ஏற்படுத்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மக்களுக்குத் தேவையான திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளும் சீரான வளர்ச்சி பெற வேண்டும் என்ற வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் திண்டுக்கல் – ஒட்டுப்பட்டி (வழி-வக்கம்பட்டி, செம்பட்டி, சித்தையன்கோட்டை), திண்டுக்கல் – D.கோம்பை (வழி-பித்தளைபட்டி, அனுமந்தராயன்கோட்டை, கரிசல்பட்டி), திண்டுக்கல் – பாப்பணம்பட்டி (வழி-பாலம்ராஜக்காபட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி) ஆகிய 3 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் சராசரியாக நாளொன்றிற்கு 2.10 இலட்சம் மகளிர் பயணம் செய்து வருகின்றனர்கள். திண்டுக்கல் மண்டலத்திற்கு ரூ.67.24 கோடி மதிப்பீட்டில் 164 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 22,69,70,184 கோடி மகளிர், கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். 1,02,157 இலட்சம் திருநங்கைகள் மற்றும் 21,09,385 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் திரு.ச.ராஜப்பா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டல பொதுமேலாளர் திரு.ஏ.முத்துக்கிருஷ்ணன் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.