Close

TNCSC DEPARTMENT

Publish Date : 25/11/2025

செ.வெ.எண்: 97/2025

நாள்: 24.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிகை செய்தி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திண்டுக்கல் மண்டலத்தில் நடப்பு காரீப் பருவம் 2025-2026 குறுவை பருவத்தில் நிலக்கோட்டை வட்டத்தில் ஐந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3,751 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உடனுக்குடன் சேமிப்பு கிடங்கிற்கு இயக்கம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 31 சதவீதம் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 514 விவசாயிகளுக்கு ரூ.9,49,90,010/- விவசாயிகளின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே குறுவை பருவத்தில் 2,862 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பா பருவத்திற்கு 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து 20,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.