Close

Election

Publish Date : 26/11/2025

செ.வெ.எண்:-100/2025

நாள்: 24.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் 96% வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது அப்படிவங்களை பூர்த்தி செய்து மீளப்பெறும் பணிகள் 04.12.2025 வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இப்பணியில் சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு பணியாளர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் (SVEEP) கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இன்று 24.11.2025 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக பாகங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் பூர்த்தி செய்வது மற்றும் கணினி பதிவேற்றம் செய்வதை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.