Close

Tamil Nadu State Rural Livelihood Movement launches new initiative 4.0 rally

Publish Date : 01/12/2025
.

செ.வெ.எண்:-110/2025

நாள்:-26.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் “புதிய உணர்வு- மாற்றத்திற்கான முன்முயற்சி-4.0” என்னும் தலைப்பில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் “புதிய உணர்வு- மாற்றத்திற்கான முன்முயற்சி-4.0” என்னும் தலைப்பில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(26.11.2025) தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினமான துவக்க நாள் (26.11.2025) முன்னிட்டு “புதிய உணர்வு – மாற்றத்திற்கான முன்முயற்சி 4.0′ என்னும் தலைப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்களைக் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கப்பட்டு பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி அருகிலுள்ள ஷிபா மருத்துவமனை வரை நடத்தப்பட்டது. மேலும், இப்பேரணியின் போது பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமத்துவத்திற்கான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் பணியாளர்களால் ஏந்திச் செல்லப்பட்டு விழிப்புணர்வு குறித்து முழக்கமிடப்பட்டது.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், பாலின சமத்துவ உறுதிமொழி வாசிக்க அரசு அலுவலர்கள் அனைவரும் உறுதி மொழியேற்றுக்கொண்டனர்.

அதன்படி, ”ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் எத்தகைய பாகுபாடுமின்றி சமமாக வளர்ப்போம். வீட்டு வேலைகளை பெண்களும் ஆண்களும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்வோம். பெண்கள் விரும்பும் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்போம். அனைத்து துறை பணிகளிலும் பெண்களின் சம பங்கேற்பை உறுதி செய்வோம். பெண்களின் பெயரில் சொத்துக்கள் பதிவு செய்வதை ஊக்குவிப்போம். அனைத்து செயல்பாடுகளிலும் பெண்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை உறுதி செய்வோம். அனைத்து இடங்களிலும் பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தப்படுவதையும் மற்றும் பொருளாதார ரீதியாக சுரண்டப்படுவதையும் அனுமதியோம். ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பளித்து அச்சமின்றி பயில உறுதுணையாக இருப்போம்.

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதை தடுத்திட பெண் சிசுகொலை மற்றும் கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிவதை தவிர்த்திடுவோம்” என ஆட்சித் தலைவர் அவர்கள், பாலின சமத்துவ உறுதிமொழி வாசிக்க அரசு அலுவலர்கள் அனைவரும் உறுதி மொழியேற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.