Close

Palani Sivagiri Ilangai Thamilar Mugam – Inspection

Publish Date : 30/12/2025
.

செ.வெ.எண்:-73/2025

நாள்:-27.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், சிவகிரி பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் திரு.மா.வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், சிவகிரி பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை இன்று (27.12.2025) அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் திரு.மா.வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் திரு.மா.வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, இலங்கைத் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டும், அவர்களின் வாழ்வினை மேம்படுத்தும் நோக்கிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், இலங்கைத் தமிழர்களுக்கு புதிய குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்றைய தினம் பழனி வட்டத்திற்குட்பட்ட சிவகிரி பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுவரும் குடியிருப்பு பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், முகாம் பகுதியில் வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும், முகாம் பகுதிகளில் தேவையான கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் திரு.மா.வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, சிவகிரி பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் மக்களிடமிருந்து தெருவிளக்கு வசதி, கழிவறை வசதி, முதியோர் உதவித்தொகை, இறந்தவர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூபாய் 5000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் திரு.மா.வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக் கொண்டார்.

மேலும், சிவகிரி பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் திரு.மா.வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.கண்ணன், பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.


.

.