Close

DDAWO Dept – Camp – Notification

Publish Date : 02/01/2026

செ.வெ.எண்:-01/2026

நாள்:-02.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் மற்றும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (Unique Disability Identity Card) வழங்கும் முகாம் ஜனவரி–2026-ஆம் மாதம் முதல் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் மற்றும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (Unique Disability Identity Card) வழங்கும் முகாம் ஜனவரி–2026-ஆம் மாதம் முதல் கீழ்கண்ட அட்டவணையின்படி, முகாம் நடைபெறும்.

1) கை, கால் இயக்கக் குறைபாடு 2) தொழு நோயிலிருந்து குணமடைந்தோர் 3) மூளை முடக்குவாத பாதிப்பு 4) குள்ளத்தன்மை 5) தசை சிதைவு நோய் 6) அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர் 7) கண் பார்வையின்மை 8) குறைந்த பார்வையின்மை 9) காது கேளாமை 10) பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு 11) அரிவாள் இரத்த சோகை 12) இரத்த அழிவுச்சோகை 13) இரத்த உறையாமை அல்லது இரத்த ஒழுகு குறைபாடு போன்ற 13 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று வழங்கும் முகாம் வாரந்தோறும் புதன் கிழமைகளில் நடைபெறும்.

மேலும், 1)அறிவுசார் குறைபாடு 2) குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு 3) புற உலக சிந்தனையற்றோர் 4) மனநோய் 5) நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு 6) திசு பன்முகக் கடினமாதல் 7) நடுக்குவாதம் 8) பல்வகை குறைபாடு போன்ற 08 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று வழங்கும் முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும்.

மேற்கண்ட முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் மற்றும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (Unique Disability Identity Card) வழங்கும் முகாம் பெறுவதற்கு ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் அசல், பாஸ்போர்ட் புகைப்படம் – 04 ஆகியவற்றை கொண்டு சென்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், இது தொடர்பாக விவரம் ஏதேனும் தேவைப்படும் எனில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக எண்.0451-2460099-க்கு தொடர்பு கொண்டு தகவலினை பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.