Pongal Gift (2026)—The Hon’ble RD Minister Distribution.
செ.வெ.எண்: 13/2026
நாள்: 08.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, ஆலந்தூர், பட்ரோடு நியாய விலைக் கடையில் இன்று (08.01.2026) அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000ஃ-ம் ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், சித்தையன்கோட்டை பேரூராட்சி மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், சித்தரேவு ஊராட்சி ஆகிய நியாயவிலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000/- ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, ஆலந்தூர், பட்ரோடு நியாய விலைக் கடையில் இன்று (08.01.2026) அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000/-ம் ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சித்தையன்கோட்டை பேரூராட்சி மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், சித்தரேவு ஊராட்சி ஆகிய நியாயவிலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000/- ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்இ மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது :-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2 கோடியே 22 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000/-ம் ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் இன்று (08.01.2026) தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் 1287 நியாயவிலைக்கடைகளின் மூலமாக 6,94,141 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000/-ம் ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை பேரூராட்சி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், சித்தேரவு ஊராட்சியில் இன்று(08.1.2026) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படிஇ திண்டுக்கல் மாவட்டத்தில் 6,94,141 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000/- வழங்குவதற்கு ரூ.208.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதில் ஆத்தூர் வட்டத்தில் 3000 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் சமயத்தில் சொன்னபடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 1.30 கோடி மகளிர் மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர். அரசு பள்ளியில் படித்து கல்லூரி மேல் படிப்பிற்கு சென்றால் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ”புதுமைப்பெண்” திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் சுமார் 11 இலட்சம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனார்கள். மேலும், ”தமிழ்ப்புதல்வன்” திட்டத்திக்கீழ் சுமார் 8 இலட்சம் மாணவர் என 19 இலட்சம் மாணவ, மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர். 60 வயது கடந்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்கச் செய்வதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியாக உள்ளார். ஆத்தூர் வட்டத்தில் 3000 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் விதமாக அவருக்கு என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் திரு.ஸ்ரீ ராகவ் பாலாஜி, சித்தையன்கோட்டை பேரூராட்சி தலைவர் திருமதி போதும்பொன்னுமுரளி, துணைத்தலைவர் திரு.ஜாகிர் உசேன், செயல் அலுவலர் திருமதி ஜெயமாலு, ஆத்தூர் வட்டாட்சியர் திருமுத்துமுருகன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
