Pension Grievance Meeting
செ.வெ.எண்:-24/2025
நாள்:-09.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிகை செய்தி
திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 06.02.2026 (வெள்ளிக்கிழமை)-அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குகள் துறை, மதுரை ஆகியோரால் நடத்தப்பட உள்ளது. ஓய்வூதியப் பலன்கள் தொடர்பான குறைகளை ஓய்வூதியதாரர்கள் தங்களின் இருப்பிட முகவரி, கடைசியாக பணிபுரிந்த துறை / அலுவலகம், ஓய்வு பெற்ற நாள், கொடுப்பாணை எண், பெறப்பட வேண்டிய ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களை தங்கள் தொலைபேசி / கைபேசி எண்களுடன் (இரு பிரதிகளில்) 04.02.2026-ஆம் தேதிக்குள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அவர்களிடம் விண்ணப்பம் வாயிலாக தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.