Close

Claims and Objections Extension of time – Special Intensive Revision 2026

Publish Date : 20/01/2026

செ.வெ.எண்:-53/2026

நாள்: 20.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (Claims and Objections) சமர்பிப்பது காலநீட்டிப்பு செய்யப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision)-2026 நடைபெற்று வருகின்றது. இதன் தொடர்ச்சியாக கடந்த 04.11.2025 முதல் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்கள் (Enumeration Forms) பெறப்பட்டு, அப்படிவங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து திரும்ப சமர்பிக்காத மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகளைத் (Claims and Objections) தெரிவிக்க, இந்திய தேர்தல் ஆணையத்தினால் 09.12.2025 முதல் 18.01.2026 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது கணக்கெடுப்பு படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து திரும்ப சமர்பிக்காத மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகளைத் (Claims and Objections) தெரிவிக்க 30.01.2026 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்காத மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.