Farmers’ Redressal Day Meeting
செ.வெ.எண்: 63/2026
நாள்: 22.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.01.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.01.2026 (வெள்ளிக்கிழமை)-அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடத்தில் நடைபெறவுள்ளது.
அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு குறித்த தொழில்நுட்பங்கள், பட்டுப்புழு வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் பெற ஆலோசனைகள், முன்னோடி வங்கிகள் மற்றும் கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களின் மூலமும் விவசாயிகளுக்கு கடன் சம்பந்தப்பட்ட விளக்கங்களும் வழங்க இருக்கிறார்கள். கூட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகள், விவசாயம் சார்ந்த கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டிட வேண்டி அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.