Close

Minority Rights Day Celebration.

Publish Date : 24/01/2026
.

செ.வெ.எண்: 69/2026

நாள்: 23.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(23.01.2026) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அந்தத் திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

கிராமப்புறங்களில் இயங்கிவரும் அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் பகுதியாக அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையின மாணவியர்களுக்கு பெற்றோர் /பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- மிகாமல் உள்ள 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு வருடத்திற்கு ரூ.500 வீதமும், 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்களுக்கு ரூ.1000 வீதம் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் 2022-23 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

அரசாணை (நிலை) எண்:100 பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் (சிநஆபி1) துறை நாள்: 22.12.2020-இன்படி “தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க ஒரு நபருக்கு ஒரு வாகனத்திற்கு ரூ.25000/- அல்லது வாகனத்தின் விலையில் 50% இதில் எது குறைந்ததோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

ஏழ்மை நிலையிலுள்ள ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட, வயது முதிர்ந்த முஸ்லீம் / கிறித்தவ மகளிர் பயனடையும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவரை பதவி வழி தலைவராகக் கொண்டு, முஸ்லீம் / கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இச்சங்கத்தினை துவங்குவதற்கு விதைத் தொகையாக தலா ரூ.1.00 இலட்சம் அரசால் வழங்கப்பட்டது. மேலும் இச்சங்கத்தின் நன்கொடையாளர்கள் மூலம் திரட்டும் நிதி ஆதாரத்திற்கு இணையாக 1:2 என்ற விகிதத்தில் அதிகபட்சம் ரூ.20 இலட்சம் இணைமானியம் அரசால் சங்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டிற்கும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள், தர்க்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷீர்கானாக்கள், முஸ்லீம் அனாதை இல்லங்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள்/ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதரபணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையங்களின் மேம்பாட்டிற்காக உலமாக்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் நல வாரியம் 2009-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு (அரசாணை (நிலை) எண்.74, பிவ, மிபிவ (ம) சிபாநலத்துறை, நாள் -24.08.2009) செயல்பட்டு வருகிறது.

கல்வி உதவித்தொகை 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும்மாணவஃமாணவியர்களுக்கு ரூ.1000/-இ 11-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு ரூ.1500/-, திருமண உதவித்தொகை (பெண் – ரூ.5,000/- ஆண் – ரூ.3000/-, மகப்பேறு உதவித்தொகை ரூ.6,000/-,இயற்கை மரணம் உதவித்தொகைரூ.30,000/-,ஈமச்சடங்கு உதவித்தொகைரூ.5,000/-, மூக்குகண்ணாடி செலவினத்தொகை திரும்ப வழங்குதல் ரூ.750/-, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித் தொகைரூ.1,25,000/-, விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூ.10,000/- முதல் ரூ.1,00,000/- வரை, முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,200/-, கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் 2022-ஆம் ஆண்டில் கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் முன்னேற்றம் அடைய அமைக்கப்பட்டது. கல்வி உதவித்தொகை 10 -ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி பட்டப்படிப்பு வரை ரூ.1,000/- முதல் ரூ.8இ000/- வரை, கல்வி உதவித்தொகை 6 ஆம்வகுப்புமுதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியருக்கு ரூ.1,000/-, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1,25,000/-, விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூ.10,000/-முதல் ரூ. 1,00,000/ வரை,இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.30,000/-, ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5,000/-, திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.3,000/- மற்றும் பெண்களுக்கு ரூ.5,000/-,மகப்பேறுஉதவித்தொகைரூ.6,000/-மற்றும் கருச்சிதைவு , கருக்கலைப்பு உதவித்தொகைரூ.3,000/-, கண்கண்ணாடி உதவித்தொகை ரூ.750/-, முதியோர் ஓய்வுதியம் (மாதந்தோறும்) ரூ.1,200/- மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள சிறுபான்மையின பயனாளிகளுக்கு விலையில்லா மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

.

.

அரசாணை நிலை எண் 71 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 20.12.2016-,ன் படி தமிழ்நாட்டில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016 – 17 ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டத்தை அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கிறித்தவர்களுக்கான கல்லறைத் தோட்டம் மற்றும் இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான் அமையப் பெறாத மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு மாநகராட்சி / நகராட்சி சார்பில் கல்லறைத்தோட்டம் / கபர்ஸ்தான் அமைப்பதற்கு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கிறித்தவ மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தினர் இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடமான கல்லறைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான்களுக்கு புதிதாக சுற்றுச்சுவர், பாதை அமைத்தல் மற்றும் புனரமைத்தல் திட்டத்தை செயல்படுத்த நிருவாக ஒப்புதலும், அதற்கென ரூ.1,00,00,000/- (ரூபாய் ஒரு கோடி மட்டும்) நிதி ஒப்பளிப்பு வழங்கியும் அரசு ஆணையிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள இஸ்லாமியர் கிறிஸ்தவர், சீக்கியர், புத்த, பார்சி மற்றும் சமணம் வகுப்பை சேர்ந்த சிறுபான்மையினர் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக சுயதொழில் தொடங்கிட தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுவணிக கடன், கைவினைஞர்களுக்கான கடன் மற்றும் கல்வி கடன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சிறுபான்மையினர் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கல்வி, சுகாதாரம், திறன் வளர்ப்பு மற்றும் பெண்களை மையப்படுத்தும் திட்டங்கள் ஏற்படுத்தி தருதல்.

543 பயனாளிகளுக்கு ரூ.1,00,00,000/- மதிப்பீட்டில் கிறித்துவ மகளிர்களுக்கு கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 1079 பயனாளிகளுக்கு ரூ.1,49,77,500/- மதிப்பீட்டில் முஸ்லீம் மகளிர்களுக்கு முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 170 சிறுபான்மையின மகளிருக்கு ரூ.9,52,000/- மதிப்பீட்டில் மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. 2022-2023ஆம் நிதியாண்டில் வக்ஃப் நிறுவனங்களில் பணிபுரியும் 3 உலமாக்களுக்கு ரூ.75,000/- மதிப்பீட்டில் புதிய இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

3958 நபர்களுக்கு ரூ.25,12,58,000/-மதிப்பீட்டில் டாம்கோ மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது. 2021-2022ஆம் ஆண்டில் 459 உலாமாக்கள் மற்றும் பள்ளிவாசலில் பணிபுரியும் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.18,30,803/- மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. உலாமாக்கள் மற்றும் பள்ளிவாசலில் பணிபுரியும் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.3,91,500,- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புறப் பள்ளிகளில் சிறுபான்மையினர் மாணவியர்கள் கல்வி கற்பதில் இடைநிறுத்தம் செய்வதை தடுப்பதற்காக 3-ஆம் வகுப்புமுதல் 6-ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையினர் இனத்தை மாணவியர்களுக்கு ரூ.41,41,500/- மதிப்பீட்டில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தேவாலயங்கள் பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கு ரூ.45,25,000/- அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. தொன்மையான தேவாலயங்கள் பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கு ரூ.1,36,00,000/- அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. தேவாலயங்கள் பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கு ரூ.80,00,000/- அரசு மானியம் வேண்டி ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, சென்னை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கல்லறை தோட்ட சுற்றுச்சுவர் கட்டும் பணிகளுக்கு ரூ.42,00,000/- அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. கல்லறை தோட்டம் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளுக்கு அரசின் மானியத் தொகை ரூ.1,43,00,000/- கோரி சென்னை சிறுபான்மையினர் நல ஆணையர் அவர்களுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டுள்ளது. கபர்ஸ்தான் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளுக்கு அரசின் மானியத் தொகை ரூ.1,70,96,000/- கோரி சென்னை சிறுபான்மையினர் நல ஆணையர் அவர்களுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.

முன்னதாக, கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் 42 நபர்களுக்கு உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய அடையாள அட்டைகள் மற்றும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் 25 நபர்களுக்கு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சுகுமாறன், கிறித்துவ மகளிர் உதவும் சங்க நிர்வாகிகள், முஸ்லீம் மகளிர் உதவும் சங்க நிர்வாகிகள் மற்றும் சிறுபான்மையின மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.