Close

“Best Transgender Award”

Publish Date : 27/01/2026

செ.வெ.எண்: 78/2026

நாள்: 27.01.2026

திண்டுக்கல் மாவட்டம் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து அவர்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை சிறப்பிக்கும்
வகையில் வழங்கப்படவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான “சிறந்த திருநங்கைக்கான விருது” பெற விண்ணப்பிக்கலாம்.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திருநங்கைகள் தினம் என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15-ஆம் தேதியன்று திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து அவர்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2026ஆம் ஆண்டுக்கான “சிறந்த திருநங்கைக்கான விருது” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெறும் சாதனையாளருக்கு ரூ.1,00,000/-க்கான (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) காசோலை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்.
தகுதிகள்

1. அரசாங்கத்தின் உதவி பெறாமல் தனது வாழ்க்கையை
கட்டமைத்துக்கொண்ட திருநங்கைகள்.

2. திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து, குறைந்தப்பட்சம் 5
திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவைப்பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவிபுரிந்த திருநங்கைகள்.

3. தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

மாநில அளவிலான உயர்மட்டக்குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய, விருதுக்கு தகுதியான விண்ணப்பத்தாரர் தங்களது கருத்துரு (விரிவான தன் விபர குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்கள்) அடங்கிய (Booklet 4) தமிழ் 2 மற்றும் ஆங்கிலத்தில் 2 புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருநங்கைகள் திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலர் அவர்களை நேரில் அணுகி கருத்துருக்கள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக 18.02.2026 வரை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். விருது பெறத்தகுதியுள்ளவர்களை இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.