TASMAC Shops Closed
செ.வெ.எண்:-81/2026
நாள்:-27.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
வடலுர் இராமலிங்கர் அவர்கள் நினைவு நாளான(01.02.2026) அன்று மதுபான விற்பனை செய்யப்படமாட்டாது
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் அனைத்தும் வடலுர் இராமலிங்கர் அவர்கள் நினைவு நாளான 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும், மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.