Close

The Honourable Minister for Food and Civil Supplies flagged off one new bus service and two extended bus services.

Publish Date : 29/01/2026

செ.வெ.எண்:-84/2026

நாள்:-29.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கள்ளிமந்தையம் பேருந்து நிலையத்தில் 1 புதிய பேருந்து இயக்கம் மற்றும் 2 பேருந்து நீட்டிப்பு இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கள்ளிமந்தையம் பேருந்து நிலையத்தில் 1 புதிய பேருந்து இயக்கம் மற்றும் 2 பேருந்து நீட்டிப்பு இயக்கத்தை இன்று (29.01.2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அறிவிக்காத பல அறிவிப்புகளை அறிவித்து, அத்திட்டங்கள் பலன்கள் அனைத்தையும் கிராமப்புறத்தில் வாழும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைகின்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்தினை மேம்படுத்திடவும், பொதுமக்கள் பேருந்து பயணத்தினை அதிகம் பயன்படுத்தவும், சாலை போக்குவரத்தினை மேம்படுத்திடவும், பாதுகாப்பான சூழ்நிலையில் பயணம் செய்வதற்காகவும், குக்கிராமங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காகவும் புதிய பேருந்துக்களை கொள்முதல் செய்து அனைத்து மாவட்டத்திற்கும் வழங்கியுள்ளார்கள்.

தமிழகத்தில் இயங்கிய பழைய பேருந்துக்களை மாற்றி புதிய பேருந்துகளாக இயக்கிடவும், பேருந்து போக்குவரத்து இல்லாத இடங்களுக்கு புதிய பேருந்து சேவையை ஏற்படுத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மதுரை கோட்டத்தின்கீழ் திண்டுக்கல், மதுரை, மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்களில் செயல்பட்டு நகர், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் பேருந்து சேவையை இயக்கி வருகின்றது.

07.05.2021 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் மகளிருக்காக விடியல் பயணத்திட்டம் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை வழங்கப்பட்டது. பெண்களுக்கான விடியல் பயணத்திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 23.78 கோடி நபர்கள் பயணம் செய்து உள்ளனர். இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு மகளிருக்கு சுமார் 1000 ரூபாய் வரை சேமிப்பு ஏற்பட்டு பொருளாதாரம் மேம்படுகிறது.

அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒட்டன்சத்திரம் – தொப்பம்பட்டி புதிய வழித்தடம் மற்றும் ஒட்டன்சத்திரம் – மஞ்சநாயக்கன்பட்டி, ஒட்டன்சத்திரம் – தங்கச்சியம்மாபட்டி வழித்தடம் நீட்டிப்பு ஆகிய பேருந்து இயக்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், பொது மேலாளர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மண்டலம் திரு.முத்துகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.