Close

Anti Tobacco Awareness

Publish Date : 31/01/2026
.

செ.வெ.எண்: 87/2026

நாள்: 30.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

காமராஜர் பேருந்து நிலையத்தில் உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைதுறை, காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை இணைந்து நடத்திய “போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைதுறை, காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை இணைந்து நடத்திய “போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று (30.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டில் போதை பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் ஆண்டுதோறும் “போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் ஆண்டுதோறும் மே 31-அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய், பக்கவாதம், மாரடைப்பு, நுரையீரல்நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள், உயிரழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் போதைபொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அரசின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, இளைய தலைமுறையினர் அதிகளவில் போதைப்பொருட்களுக்கு அடிமையாகின்றனர். எனவே, போதைப்பொருட்கள் பயன்பாட்டினால் என்னென்ன நோய்கள் வரக்கூடும் என்பதை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும். போதைப்பொருட்கள் பயன்பாட்டினால் உயிரிழப்பிற்கு ஆளாகக்கூடும் என்பதையும், நாம் உயிரிழந்துவிட்டால் தங்களுடைய குடும்பங்களின் நிலைமை என்னவாக இருக்கும் என்பதையும் ஒரு நிமிடம் நினைத்து பார்த்தாலே பொதைப்பொருட்கள் உபயோகத்திலிருந்து விடுபடலாம்.

தொடர்ந்து, இன்றை தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் ”போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” என்ற தலைப்பிலான வாசக ஒட்டுவில்லைகளை பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் ஒட்டியும் மற்றும் பொதுமக்களுக்கு ”போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” தொகுப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், பொது மேலாளர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மண்டலம் திரு.முத்துகிருஷ்ணன், திண்டுக்கல் கோட்டக்கலால் அலுவலர் திருமதி.ஆ. மீனாதேவி அவர்கள் ஆகியோர் உட்பட பலர் உள்ளனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.