Close

“My Village, My Dream Project”

Publish Date : 04/02/2026

செ.வெ.எண்: 06/2026

நாள்: 04.02.2026

திண்டுக்கல் மாவட்டம்

”என் ஊரு என் கனவு திட்டம்” தொலைநோக்கு திண்டுக்கல் -2030 மாவட்ட அளவிலான கருத்தரங்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் ”என் ஊரு என் கனவு திட்டம்” தொலைநோக்கு திண்டுக்கல்-2030 மாவட்ட அளவிலான கருத்தரங்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் இன்று(04.02.2026) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிய திட்டங்களை அறிவித்து மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொருவரும் நாள் நல்லமுறையில் படித்து, வேலைக்கு சென்று எதிர் காலத்தை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதே போல் ஒரு மாநிலத்திற்கும் ஒரு மாவட்டத்திற்கும் தொலைநோக்கு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக என் ஊரு என் கனவு என்ற திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான தொலை நோக்கு திட்டங்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தற்போது நம்மிடம் என்ன வசதிகள் வாய்ப்புகள் இருக்கிறது. இந்த வசதி, வாய்ப்புகளை பயன்படுத்தி, அடுத்த 5 ஆண்டுகளில் அதனுடைய இலக்கு என்ன என்ற தொலைநோக்கு பார்வையில் உருவாக்குவதாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் கலைஞர் கனவு இல்லங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சாலைகளும் போக்குவரத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. .

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் விடியல் பயணம், கலைஞர். மகளிர் உரிமைத்தொகை ஆகிய திட்டங்களின் மூலம் பெண்களின் உரிமையையும், அவர்களின் பங்களிப்பை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தி வருகிறார்கள். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினாலும், அடுத்த 5 ஆண்டுகளில் தேவைகள் என்ன, பெண்களின் எதிர்பார்ப்பு என்ன, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் உட்பட பல்வேறு தொலைநோக்கு பார்வையில் திட்டங்களை உருவாக்குவதாகும். வேலைவாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என்றால் புதிய தொழிற்சாலைகள் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் அதிகமாக இருக்கிறார்கள். அடுத்துவரும் 5 ஆண்டுகளில் இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்த வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டி தேர்வு மையத்தில் பயின்று வேறு மாவட்டத்தில் பணியாற்றி வரும் அரசு அலுவலர்களை அழைத்து திண்டுக்கல் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான அங்கீகாரத்தை உருவாக்க வேண்டும். அறிவை வளர்ப்பதற்காகவும், அறிவு சார்ந்த திட்டங்களை உருவாக்குவதற்காகவும் பல்வேறு திட்டங்கள் உருவாக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி, துணை ஆட்சியர் (பயிற்சி) திருமிகு.மு.ராஜேஸ்வரி சுவி, உட்பட பலர் கலந்து கொண்டனர்

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.