TNPSC Exam
செ.வெ.எண்: 10/2026
நாள்: 05.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி
திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி-II / IIA பணிகள்) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 08.02.2026 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் இரு வேளைகளிலும் GTN கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இத்தேர்வில், திண்டுக்கல் மாவட்டத்தில் 270 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதவுள்ளனர். மேலும் தேர்வு நாளான 08.02.2026 அன்று தேர்வுக் கூடத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் முற்பகல் நடைபெறும் தேர்விற்கு காலை 9 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பிற்பகல் நடைபெறும் தேர்விற்கு பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் கைப்பேசி உள்ளிட்ட தேர்வாணையத்தால் தடை செய்யப்பட்ட உபகரணங்களை எடுத்துவர அனுமதியில்லை. தேர்வர்கள் சரியான நேரத்திற்கு தேர்வுக் கூடங்களுக்கு செல்லும் வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.