The Hon’ble Rural Development Minister – Foundation Works
செ.வெ.எண்:-13/2026
நாள்: 06.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சித்தையன்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.386.00 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை, பேவர் பிளாக் சாலை, தரைமட்டத் தொட்டி மற்றும் 500 புதிய குடிநீர் குழாய் இணைப்பு, பைப் லைன் விஸ்தரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணியினை தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சித்தையன்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் (மாநில நிதிக்குழு ஆணையம்), கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம், மாநில நகர்புற அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டம் மற்றும் கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ், ரூ.386.00 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை, பேவர் பிளாக் சாலை, தரைமட்டத் தொட்டி மற்றும் 500 புதிய குடிநீர் குழாய் இணைப்பு, பைப் லைன் விஸ்தரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணியினை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற நோக்கில் செயலாற்றி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, தெருவிளக்கு அமைத்தல், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணியினையும், அரசு அலுவலகங்கள்,அரசு பள்ளி, கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய அலுவலகங்கள் கட்டுவதற்கும், பழுதடைந்த கட்டடங்ளை சீர்செய்யும் பணிகளையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தும் வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஏதாவதொரு வகையில் மக்களுக்கு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயலாற்றி வருகிறார்கள். கிராமங்களில் பெருவாரியான மக்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்இ அந்தந்த கிராமப் பகுதிகளுக்குட்பட்ட அணைகளிலிருந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்திற்கு சென்று வருவதற்கு வண்டிப் பாதைகளை பயன்படுத்தி வந்த நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, வண்டிப்பாதைகளையும் தார்சாலைகளாக மேம்படுத்தி விவசாயிகள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டு வருகிறது. 
மேலும், கோம்பை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 200 ஏக்கர் நிலத்தில் நெல் பயிடும் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் அறுவடை செய்யும் நெல்மணிகளை வீட்டிற்கு கொண்டு செல்வதற்கு தார்சாலை இல்லாததால் வண்டிகள் அவ்வழியில் செல்ல இயலாது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனைத் கருத்திற்கொண்டு அப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு தார் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசின் திட்டங்களை மக்களுக்கு சென்றடைய செய்வதிலும், வளர்ச்சித் திட்டப்பணிகளை அனைத்துப் பகுதிகளிலும் சீராக நிறைவேற்றுவதிலும் இந்த அரசு உறுதியாக உள்ளது. இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது. எனவே, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, இன்றைய தினம் தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் (மாநில நிதிக்குழு ஆணையம்)-2025-2026-ன்கீழ், சித்தையன்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட புதுப்பள்ளி வாசல் தெரு மற்றும் மண்டைசாயபு தெருக்களில் ரூ.18.93 இலட்சம் மதிப்பீட்டிலும்இ கன்னிமார் கோவில் தெருவில் ரூ.6.72 இலட்சம் மதிப்பீட்டிலும், முத்தாலம்மன்கோவில் 7-வது தெருவில் ரூ.13.19 இலட்சம் மதிப்பீட்டிலும், சேக் அப்துல்காதர் தெருவில் ரூ.25.03 இலட்சம் மதிப்பீட்டிலும், சேடபட்டி நல்லமுத்து 4 மற்றும் 6-வது தெருக்கள் மற்றும் குறுக்குத் தெருக்களில் ரூ.30.52 இலட்சம் மதிப்பீட்டிலும், சேடபட்டி நாகலிங்கம் 6-வது தெருவில் ரூ.10.68 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் நாகலிங்கம் தெரு குறுக்கு தெருக்களில் ரூ.18.93 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.124.00 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மேம்படுத்தும் பணிகளுக்கும்,
கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம் (2025-2026)-ன்கீழ், கணபதிபட்டி 1,2 மற்றும் 3-வது தெருக்களில் ரூ.40.82 இலட்சம் மதிப்பீட்டிலும்இ பிள்ளையார் கோவில் 11 மற்றும் 12-வது தெருக்களில் ரூ.14.08 இலட்சம் மதிப்பீட்டிலும், சேக் அப்துல்காதர் தெருவில் ரூ.10.6 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் கொண்டமநாயக்கன்கோட்டை 1-வது தெருவில் ரூ.10.5 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.76.00 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கும், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம் (2025-2026)-ன்கீழ், புதூர் 10,11 மற்றும் 12-வது தெருக்களில் ரூ.34.00 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்கும்,
மாநில நகர்புற அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டம் (2025-2026)-ன்கீழ், சித்தையன்கோட்டை பேரூராட்சி நீர்த்தேக்க நிலையத்தில் 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட (6.60மீ விட்டம் X 3.30மீ உயரம்) கொண்ட தரைமட்ட தொட்டி மற்றும் மின்மோட்டார் பொருத்துதல் மற்றும் சித்தையன்கோட்டை பேரூராட்சி பகுதியில் கூடுதலாக 500 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.49.00 இலட்சம் மதிப்பீட்டிலும்,
கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை திட்டம் (2025-2026)-ன்கீழ், பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.22.50 இலட்சம் மதிப்பீட்டில் வடிகாலுடன் கூடிய பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணிக்கும், பகவதியம்மன்கோவில் 1 மற்றும் 2-வது தெருக்களில் ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டிலும், சாமிக்கண்ணு தெருவில் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் சாமிக்கண்ணு 1-வது மற்றும் 2-வது தெருக்களில் ரூ.24.50 இலட்சம் மதிப்பீட்டிலும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கும், தாமரைக்குளம் முதல் நரசிங்கபுரம் மேல்நிலைத் தொட்டி வரை ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் விஸ்தாரிப்பு பணிக்கும் என மொத்தம் ரூ.103.00 இலட்சம் மதிப்பீட்டிலான பணிகளுக்கும் என ஆக மொத்தம் ரூ.386.00 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சித்தையன்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் திருமதி.போதும்பொண்ணு முரளி, துணை தலைவர் மு.ஜாகீர் உசேன், சித்தையன்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் திரு.ஜெயமாலு அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.