The Hon’ble Minister of Rural Development, Mr. E. Periyasamy, inaugurated the breakfast scheme for sanitation workers.
செ.வெ.எண்:- 20/2026
நாள்:-09.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் இன்று (09.02.2026) மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி சிறப்பு நிலைப் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் இன்று (09.02.2026) மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குகினார்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி சிறப்பு நிலைப் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
இவ்விழாவில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். நாம் வசிக்கும் பகுதியை தூய்மை செய்யும் பணியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உள்ளார். தூய்மைப்பணியாளர்கள், ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தேர்தல் சமயத்தில் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தியும், சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகளும், 234 தெருக்களும் உள்ளன. 451 சதுரகிமீ பரப்பளவுள்ள இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 28,914 ஆகும். 10,622 வீடுகளில் இருந்தும். 2,100 வணிக நிறுவனங்களிலிருந்தும் சேகரமாகும் குப்பைகளை சேகரித்து உரமாக்கும் பணியினை இப்பேரூராட்சியில் 35 தூய்மை பணியாளர்கள் மற்றும் 38 சுயஉதவிக்குழு உறுப்பினர்களும் சிறப்பாக செயல்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.
தூய்மை பணியினை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு நலன் சேர்க்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் என்ற சிறப்பான திட்டம் அறிவிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திருவள்ளுவர் மாவட்டத்தில் இன்று (09.022026) துவக்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தினை செயல்படுத்திட மாதம் ஒன்றுக்கு ரூ.89,750/- வீதம் பனிரெண்டு மாதங்களுக்கு ரூ.10,77,000/- பேரூராட்சியின் பொதுநிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சி தூய்மை பணியாளர்களின் நலன் காக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 23 பேரூராட்சிகளில் மொத்தம் 1079 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். சின்னாளப்பட்டி பேரூராட்சியில் 73 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
அரசின் திட்டங்களை மக்களுக்கு சென்றடைய செய்வதிலும், வளர்ச்சித் திட்டப்பணிகளை அனைத்துப் பகுதிகளிலும் சீராக நிறைவேற்றுவதிலும் இந்த அரசு உறுதியாக உள்ளது. இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் விதமாக அவருக்கு என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை, ஆத்தூர் வட்டாட்சியர் திரு.முத்துமுருகன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.ராஜா, சின்னாளபட்டி செயல் அலுவலர் திருமதி.இளவரசி, சின்னாளபட்டி பேரூராட்சி தலைவர் திருமதி.பிரதீபா கனகராஜ், துணை தலைவர் திருமதி.ஆனந்தி பாரதிராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.