Trade Apprenticeship Engagement Fair (TAEF) 2025-2026
செ.வெ.எண்:-26/2026
நாள்:-10.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி
இயக்குநரகம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக மண்டல அளவிலான Trade Apprenticeship Engagement Fair (TAEF) 2025-2026 தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மதுரை வளாகத்தில் 19.02.2026 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் மதுரை மண்டலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தொழிற்பிரிவுகளில் தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க பயிற்சியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ITI, Diploma, Degree படித்த ஆண்/பெண் இருபாலரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தற்போது தொழிற்பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூபாய் 10,000/- முதல் 12,000/- வரை வழங்கப்படும்.
எனவே இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காத அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள், மற்றும் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு ITI, Diploma, Degree படித்த ஆண்/பெண் இருபாலரும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் அவர்களை நேரில் அல்லது 0451-2970049 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.