Cauvery Joint Drinking Water Project – Inauguration of completed works.
செ.வெ.எண்:-38/2026
நாள்:-13.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ஒட்டன்சத்திரம் நகராட்சி, 2 பேரூராட்சிகள் மற்றும் 7 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 1,422 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1368.05 கோடி மதிப்பீட்டிலான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் முடிவுற்ற முதற்கட்ட திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் முன்னிலையில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ஒட்டன்சத்திரம் நகராட்சி, 2 பேரூராட்சிகள் மற்றும் 7 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 1,422 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1368.05 கோடி மதிப்பீட்டிலான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் முடிவுற்ற முதற்கட்ட திட்டப் பணிகளை இன்று (13.02.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குநர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் திட்ட விளக்கவுரை ஆற்றினார்:-
திண்டுக்கல் மற்றும் இராமநாதபுரம் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ், காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனூர் மற்றும் நெய்க்காரப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1422 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டமாகும். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள் 5 பேரூராட்சிகள் மற்றும் 11 ஒன்றியங்களில் உள்ள 2306 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனூர், நெய்க்காரப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் 7 ஒன்றியங்களில் உள்ள உள்ள 1422 ஊரகக் குடியிருப்புகளுக்கான காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு அரசாணை நிலை எண்.176. நகள் 14.12.2022ல் ரூ.4187.84 கோடிக்கு ஜல்ஜீவன் மிஷன், அம்ருக் 2.0 மற்றும் மாநில அரசு ஆகிய நிதியின் கீழ் பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு நாளொன்றுக்கு தேவையான 135 மில்லியன் லிட்டர் குடிநீரினை. கரூர் மாவட்டம் நஞ்சைப்புகலூரில் காவிரி ஆற்றில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நீர் எடுப்பு கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டு, பின்னர் நாளொன்றுக்கு 135 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீரானது இரண்டு தனித்தனி அமைப்புகள் மூலம் இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு உந்தப்படுகிறது.
அமைப்பு-II-ன் கீழ், நாளொன்றுக்கு 41.61 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 24 கி.மீ நீளத்திற்கு சின்னக்காம்பட்டி பகுதியில் அமைந்துள்ள 13.10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீருந்து நிலையத்திற்கு நீர் உந்தப்பட்டு பின்னர், 105.73 கி.மீ நீருந்து குழாய்கள் மூலம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 45 மற்றும் புதியதாக அமைக்கப்பட்ட 53 தரைமட்ட தீர்த்தேக்க தொட்டிகளுக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 589 மற்றும் 168 புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு 1082.85 கி.மீ நீளமுள்ள நீருந்து குழாய்கள் மூலம். நீர் உந்தப்பட்டு, 506 ஊரசு குடியிருப்புகள். ஒட்டன்சத்திரம் நகராட்சிஇ நெய்க்காரப்பட்டி மற்றும் கீரனூர் பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
நத்தம், வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 3 கூட்டு குடிநீர் திட்டங்களிலிருந்து நாளொன்றுக்கு கிடைக்கப்பெறும் 23.37 மில்லியன் லிட்டர் உபரி நீரினை கொண்டு, ரெட்டியார்சத்திரம், வடமதுரை வேடசந்தார் மற்றும் திண்டுக்கல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 916 ஊரக குடியிருப்புகளுக்கு மறுவிநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 3 கூட்டு குடிநீர் திட்டங்களிலிருந்து பெறப்படும் நீரினை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 03 மற்றும் புதியதாக அமைக்கப்பட்ட 57 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளுக்கு 2691.43 கி.மீ நீளமுள்ள பிரதானஃ தன்னோட்டம் / கிளை / நீருந்து குழாய் வழியாக புதியதாக அமைக்கப்பட்ட 503 மற்றும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 632 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலிருந்து, புதியதாக அமைக்கப்பட்ட மற்றும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பகிர்மான குழாய்கள் வழியாக வீட்டு இணைப்புகள் மூலம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 11.28 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தின் முதற்கட்டமாக நிறைவு பெற்றுள்ள பணிகள் பொதுக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், பொதுமக்களின் குடிநீர் பிரச்சனையை நிவர்த்தி செய்யும் வகையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை ரூ.4200.00 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தினார்கள். இதில் திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.1360.00 கோடி ஒதுகீடு செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.2840.00 கோடி ஒதுகீடு செய்யப்பட்டது. இத்திட்டமானது திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்குமான திட்டமாகும்.
மேலும். பரம்பிக்குளம் ஆழியாறில் இருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு எழுந்ததாலும், இராமநாதபுரத்திற்கு கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு அதிக செலவாகும் என்பதாலும், காவிரியை நீராதாரமாகக் கொண்டு இத்திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க உருவாக்கப்பட்ட திட்டமாகும். திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட ஒட்டன்சத்திரம் பகுதியில் இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. நிறைவு பெற்றுள்ள திட்டப் பணிகளை முதற்கட்டமாக இன்றை தினம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், விரைவில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் முழுமையாக குடிநீரை கொண்டு சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தொடர்ந்து, சென்னை, கோவை, சேலம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் சுமார் ரூ.16000.00 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கான முழு நிதியும் தமிழ்நாடு அரசிடமிருந்தே பெறப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் அந்தந்த துறைகளின் வாயிலாக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியினை முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், நடப்பாண்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூபாய் 26,000 கோடியும், நகராட்சித் துறைக்கு ரூபாய் 25,000 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்த திட்டங்கள் மட்டுமல்லாமல் சொல்லாத பல வாக்குறுதிகளையும் செயல்படுத்தி மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு செயலாற்றி வருகிறார்கள். எனவே, பொதுமக்கள் அனைவரும் அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழியில், தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கும் பணியினை அமைச்சர் பெருமக்களாகிய நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினார்கள். இத்திட்டத்தின் 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. நிறைவு பெற்றுள்ள திட்டப் பணிகளை முதற்கட்டமாக இன்றை தினம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் திண்டுக்கல் மாவட்டமானது குடிநீர் பிரச்சனை இல்லாத மாவட்டமாக சிறந்து விளங்கும் என்பதில் எந்தவிதமாக மாற்றுக்கருத்தும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். மேலும், திண்டுக்கல் மாவட்டமானது குடிநீர் பிரச்சனை இல்லாத மாவட்டமாக விளங்குவது மட்டுமின்றி விவசாயத்திலும் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக விளங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, எந்தெந்த வகையில் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கலாம் என்பதையே நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருகிறார்கள். மேலும், அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கப்படுகிறதா என்பதை அந்தந்த துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்புஇ திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை கருத்திற்கொண்டு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினார்கள். இத்திட்டமானது கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ஒட்டன்சத்திரம் நகராட்சி, 2 பேரூராட்சிகள் மற்றும் 7 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 1,422 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1368.05 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக் குடிநீர் வங்கும் திட்டத்தை முதற்கட்டமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் இனிவரும் 30 ஆண்டு காலத்திற்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது. இத்திட்டத்தின் மூலம் ஒட்டன்சத்திரம், கீரனூர், நெய்க்காரப்பட்டி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், திண்டுக்கல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளுக்கு தினந்தோறும் குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலுக்கு கிரிவல பாதை, ஒட்டன்சத்திரம் குப்பை கிடங்கிற்கு சுற்றுசுவர் அமைக்கப்பட்டுள்ளது. புதிய மார்கெட், பேருந்து நிலையம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில், 13.12.2025-அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எனவே, தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்த குறும்படத்தினை பொதுமக்கள் பார்வைக்காக காணொலி மூலம் காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், மதுரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தலைமைப் பொறியாளர் திரு.மு.கணேஷ், திண்டுக்கல் நிர்வாகப் பொறியாளர் (பராமரிப்பு கோட்டம்) திரு.வெ.மு.சுரேஷ்குமார் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.