Election Flying Squad Training.
செ.வெ.எண்:-66/2026
நாள்:25.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள 48 பாதுகாப்பு குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள 48 பாதுகாப்பு குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, எதிர் வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஒரு தொகுதிக்கு ஒரு அலுவலர் மற்றும் இரண்டு. காவலர்கள் உள்ளடக்கிய மூன்று பாதுகாப்பு குழுக்களுக்கும், கொடைக்கானல் வட்டத்திற்கு மட்டும் தனியே ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பறக்கும் படையில் (Flying Squad)-24 குழுக்களும், நிலையான நிலைக்குழுவில் (Static Surveillance)-24 குழுக்களும் ஆகமொத்தம் 48 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள 48 பாதுகாப்பு குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சிக் கூட்டம் சிறப்பாக நடத்தப்பட்டன. தொடர்ந்து, 48 பாதுகாப்பு குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இப்பயிற்சி கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ப.ராஜகுரு, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அன்பழகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சுகுமாறன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.ஹென்றி பீட்டர் அவர்கள் ஆகியோர் உட்பட ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம் மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.