Close

Free coaching class for the RRB Group D exam

Publish Date : 02/03/2026

செ.வெ.எண்:-06/2026

நாள்:-02.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, RRB Group-D தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்பு 26.02.2026 அன்று முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும் மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன.

எனவே, போட்டித் தேர்விற்குத் தயாராகும் போட்டித்தேர்வு ஆர்வலர்கள் இந்த அரியவாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் இவ்வலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது விவரங்களைப் பதிவு செய்து இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம் எனவும், மேலும், தகவலுக்கு 9499055924 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.