Close

Volunteers have been appointed to write petitions for the GDP meetings.

Publish Date : 03/03/2026

செ.வெ.எண்:-07/2026

நாள்:-02.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பொது மக்களில் எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் மற்றும் மனுக்கள் எழுதத் தெரியாத மனுதாரர்களுக்கு எளிதில் மனுக்கள் எழுத ஏதுவாக பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் நியமிக்கபட்டுள்ளனர். வரும் வாரங்களில் பொதுமக்கள் இவர்கள் மூலம் மனு எழுதி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் வியாபார நோக்கில் வெளி நபர்கள் மனுக்கள் எழுதி அதற்கான தொகையினை பொது மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு வருவதாக புகார் வரப்பெற்றுள்ளது. ஆகவே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களிடம் திங்கட்கிழமை தோறும் வெளிநபர்கள் மனுக்கள் எழுதும் நபர்கள் கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத்தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நியமனம் செய்யப்பட்ட தன்னார்வலர்களிடம் மனுக்கள் எழுதி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.