Close

Hon’ble Chief Minister Shri.M.K.Stalin inaugurated the Workers Welfare Centre through video conferencing.

Publish Date : 05/03/2026

செ.வெ.எண்:-12/2026

நாள்:-04.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், புதியதாக அமைக்கப்பட்டுள்ள உழைப்பாளர் நலக்கூடத்தை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இரா.சச்சிதானந்தம் அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள உழைப்பாளர் நலக்கூடத்தில் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள காட்டாஸ்பத்திரி பேருந்து நிறுத்தம் அருகில் கட்டுமானத் தொழிலாளர்களுக்காக புதியதாக அமைக்கப்பட்டுள்ள உழைப்பாளர் நலக்கூடத்தை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று(04.03.2026) தொடங்கி வைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, கட்டுமானத் தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள உழைப்பாளர் நலக்கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இரா.சச்சிதானந்தம் அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மூலமாக கட்டுமானத் தொழிலாளர்கள் நாள்தோறும் முக்கிய நகர்ப்புற பகுதிகளில் காலைவேளையில் ஓரிடத்தில் குழுமியிருந்து பணிக்கு செல்வது வழக்கம். குழுமியிருக்கும் இடத்திலிருந்து வேலையளிப்போர் அல்லது ஒப்பந்தாரர்களால் பல்வேறு கட்டுமானப் பணியிடங்களுக்கு கட்டுமானத் தொழிலாளர்களை அழைத்துச் செல்வார்கள். எனவே, கட்டுமானத் தொழிலாளர்கள் கூடும் இடங்களில் குடிநீர் மற்றும் இதர அடிப்படை வசதிகளுடன் கூடிய கட்டுமான தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடம் அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார்கள்.

அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள காட்டாஸ்பத்திரி பேருந்து நிறுத்தம் அருகில் புதியதாக அமைக்கப்பட்ட உழைப்பாளர் நலக்கூடத்தை இன்று (04.03.2026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலமாக பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள்.  .

தொடர்ந்து, இன்றைய தினம் உழைப்பாளர் நலக்கூடத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில், கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தின் வாயிலாக 1485 நபர்களுக்கு ரூ.41,31,600/- மதிப்பிலான கல்வி உதவித்தொகையும், 72 நபர்களுக்கு ரூ.14,40,000/- மதிப்பிலான திருமண உதவித்தொகையும், 2 நபர்களுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பிலான பணியிடத்து விபத்து மரண உதவித்தொகையும், 2 நபர்களுக்கு ரூ.1,10,000/- மதிப்பிலான இயற்கை மரண உதவித்தொகையும் ஆகமொத்தம் 1,577 நபர்களுக்கு ரூ.66,86,100/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் உறுப்பினர்களின் வங்கி கணக்கிற்கு மின்தீர்வை மூலம் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஐந்து ஆண்டு சாதனைகளாக நலவாரியத்தில் 83,627 தொழிலாளர்களை இணையதளம் வாயிலாக புதிய உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 58,204 உறுப்பினர்களை நவைாரிய அட்டை புதுப்பித்குல் செய்யப்பட்டுள்ளது மேலும், 1,21,959 நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.139,03,54,896-(ரூபாய் நூற்று முப்பத்து ஒன்பது கோடியே மூன்று இலட்சத்து ஐம்பத்து நான்காயிரத்து எண்ணுாற்று தொன்னூற்று ஆறு) மதிப்பிலான கீழ்கண்ட நலத்திட்ட உதவிகளான கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ஓய்வூதியம், இயற்கை மரண உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை, வீட்டு வசதித்திட்டம், இஸ்கூட்டர் மானியம், பெண் ஆட்டோ மானியம், தீவிர நோய் உதவித்தொகை, MBBS / IIT / IIM உயர்கல்வி பயில்வதற்கு உதவித்தொகை, கண்கண்ணாடி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவித்தெகைகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையளிப்போர் அல்லது ஒப்பந்தாரர்களால் பல்வேறு கட்டுமானப் பணியிடங்களுக்கு தங்களை அழைத்துச் செல்லும் வரை உழைப்பாளர் நலக்கூடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், கட்டுமானத் தொழிலாளர் வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கட்டுமானத் தொழிலாளர்கள் அரசின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து தங்களுடன் பணியாற்றும் கட்டுமானத் தொழிலாளர் வாரியத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு எடுத்துரைத்து அவர்களையும் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தொடர்ந்து, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்களை தொழிலாளர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, இன்றைய தினம் உழைப்பாளர் நலக்கூடத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த நிகழ்ச்சியில், கட்டுமான தொழிலாளர் வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களில் 15 நபர்களுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பிலான திருமண உதவித்தொகையும், 2 நபர்களுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பிலான பணியிடத்து விபத்து மரண உதவித்தொகையும், 2 நபர்களுக்கு ரூ.1,10,000/- மதிப்பிலான இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இரா.சச்சிதானந்தம் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி.இளமதி ஜோதிபிரகாஷ், திண்டுக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.இரா.இராஜ்குமார், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் திரு.ச.ராஜப்பா அவர்கள் ஆகியோர் உட்பட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.