Meeting on Adherence to Model Code of Conduct Held for District-Level Election Monitoring Committee in Dindigul.
செ.வெ.எண்: 57/2026
நாள்: 18.03.2026
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிகை செய்தி
இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026)-அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அணுகக்கூடிய தேர்தல் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான கூட்டம் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் பின்வருமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
1) திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
2) மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்காளிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும் போதிய அளவில் சக்கர நாற்காலி (Wheel Chairs) தயார் நிலையில் வைத்திடுமாறு அனைத்து நகராட்சி அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
3) மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் எளிமையாகச் சென்று வாக்களிப்பதற்கு போதிய வசதிகள் ஏற்படுத்திடுமாறு அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
4) மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிப்பதை எளிமையாக்குவதற்கு ஒவ்வொரு வாக்குச் சாவடி மையத்திலும் உதவி மையம் (Help Desk) அமைத்திடுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தேர்தல் நடத்தை விதிகள் குறித்து மேற்கொள்வது குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.