BC Welfare Dept Commissioner – Inspection
செ.வெ.எண்:-31/2025
நாள்:-12.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், இ.ஆ.ப அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து இன்று (12.12.2025) பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், இ.ஆ.ப அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இ.சித்தூர் கிராமத்தில் அமைந்துள்ள வேடசந்தூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் ரூ.374.00 இலட்சம் மதிப்பீட்டில் 0.20.0 ஏர்ஸ் பரப்பளவில் புதியதாக கட்டப்பட்டு வரும் வேடசந்தூர் சமூக நீதி கல்லூரி மாணவியர் விடுதியின் கட்டுமானப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணாக்கர்களுக்கு வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மிதிவண்டிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், வேடசந்தூர் சமூகநீதி பள்ளி மாணவர் விடுதியினையும், விடுதி மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் கூடத்தினையும் பார்வையிட்டு ஆய்து செய்தார். விடுதி மாணவர்களிடம் உணவின் தரம் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், இ.ஆ.ப அவர்கள் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, வேடசந்தூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திருமதி.டாக்டர்.சுமதி மற்றும் பொதுப்பணித்துறை (கட்டடம் (ம) பராமரிப்பு) உதவி பொறியாளர் திருமதி.வைக்கம் நிதி மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சுகுமார் மற்றும் வேடசந்தூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.