Close

Book Festival Inaugural

Publish Date : 30/08/2025
.

செ.வெ.எண்:-106/2025

நாள்:28.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் இலக்கிய களம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகத் திருவிழாவை சென்னை உயர்நீதிமன்றம் மாண்பமை நீதியரசர் லெ.விக்டோரியா கௌரி அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொதுநூலக இயக்ககம் மற்றும் இலக்கியக் களம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகத் திருவிழாவை சென்னை உயர்நீதிமன்றம் மாண்பமை நீதியரசர் லெ.விக்டோரியா கௌரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(28.08.2025) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

புத்தக முதல் விற்பனையை உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன்,இ.ஆ.ப, அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) கள்ளக்குறிச்சி மரு எம்.சுபதர்ஷினி இ.ஆ.ப, அவர்கள் ஆகியோர் வெளியிட திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் திரு. பு.மா.ராஜ்குமார், இ.வ.ப அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாண்பமை நீதியரசர் லெ.விக்டோரியா கௌரி அவர்கள் பேசியதாவது:-

திண்டுக்கலில் 12-வது புத்தகத்திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் கவனத்தோடும், உற்சாகத்தோடும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளார்கள். சமுகத்தில் உள்ள மக்கள் அனைவரும் புத்தகத்திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்கள் சிறப்பாக இந்த புத்தக திருவிழா ஏற்பாடு செய்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்டை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால். நாட்டிற்காக உழைத்தவர்களை பற்றி புரிந்து கொள்ள வேண்டும். பாரத நாடு பழம்பெரும் நாடு, பாரத கண்டம் என்பது பல நூறு தேசங்களாக பிரிந்து இருந்தாலும். சிந்தனையாலும், கலாச்சாரத்தலும், பண்பாடாலும் இந்த நாடு நிலைத்து நின்றது. 1947-ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் பெற்ற போது பல்வேறு தேசங்கள் ஒன்று இணைக்கப்பட்டு சுதந்திரம் கிடைத்தது. தேசிய ஒருமைப்பாட்டை பற்றி நாங்கள் படித்திருக்கிறோம். ஒரு நாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த நாட்டின் மக்களை பற்றியும் அந்த நாட்டில் உள்ள தத்தவங்களை பற்றி புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டை பொருத்தவரை கலச்சாரம் மிகுந்த நாடு, அதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் எத்தனை புத்தகங்களை படிக்க வேண்டும். குறிப்பாக இந்த நாட்டின் கனிமங்களையும் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். மகாத்மா காந்தியின் வாழ்க்கையை புரட்டி பார்க்க வேண்டும். நமது நாடு சுதந்திரம் பெற மகாத்மா காந்தி அவர்கள் மிகப்பெரிய பங்காற்றினார்கள். பெரிய பெரிய தலைவர்களை இந்த நாடு பெற்றுள்ளது.தேச தலைவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளை மாணவர்கள் படிக்க வேண்டும். என மாண்பமை நீதியரசர் லெ.விக்டோரியா கௌரி அவர்கள் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் 12-வது புத்தகத்திருவிழா தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 12-வது புத்தகத்திருவிழா என்பது இந்த கல்வி ஆண்டில் முதல் நிகழ்ச்சியாக பள்ளி கல்வித்துறை மற்றும் பேரறிஞர்கள், பெரியவர்கள், அரசு அலுவலர்கள் மாணவர்கள் ஆகியோர் பங்களிப்போடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 38,000 பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக உண்டியல் வழங்கப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றம் மாண்பமை நீதியரசர் அவர்களால் தொடங்கி வைத்துள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எண்ணற்ற திட்டங்களை செயல்பாடுத்தி உள்ளார்கள். குறிப்பாக பெண்களுக்கும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றார்கள். புத்தகத்திருவிழா என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசின் ஒத்துழைப்போடு நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் புத்தகதிருவிழாவிற்கு ஒரு சிறப்பான கருத்து இருக்கிறது. அது என்னவென்றால் அரசு தான் எந்த ஒரு சேவைகளுக்கும், பொதுமக்கள் பயன்படுத்தும் திட்டங்களும் முதல் படி எடுத்து வைக்கும். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு வரை திண்டுக்கல் இலக்கிய களம் என்ற தன்னார்வ ஒத்துழைப்போடு புத்தகத்திருவிழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், பொதுநூலக இயக்ககம் மற்றும் இலக்கியக் களம் சார்பில் இன்று அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளியில் 12-வது புத்தகத்திருவிழா இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாத காலமாக ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது சிறப்பாக இந்த புத்தகத்திருவிழா நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கும்,பொதுமக்களுக்கும் ஏற்ற வகையில் சிறப்பாக ஏற்பாடுகளை செய்வதுதான் இந்த புத்தகத்திருவிழாவின் நோக்கமாகும். மாவட்டத்தில் உள்ள மாணவர்கள், பொதுமக்களுக்கு சென்றைடய வேண்டியதுதான் இந்த புத்தகத்திருவிழாவின் நோக்கம். 126 புத்தக அரங்குகளும், 115 புத்தக பதிப்பகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் 3000-க்கும் மேற்பட்ட பள்ளிகளை மாணவர்கள் வருவார்கள் என மிகுந்த எதிர்பார்ப்போடு அங்கிவிலாஸ் மேல்நிலைப்பள்ளயில் புத்தகத்திருவிழா இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளின் சார்பாக சிறந்த முறையில் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் புத்தகத்திருவிழா நடைபெற்று வருகிறது. 5000-க்கும் மேற்பட்ட மாணவியர்களுடன் திண்டுக்கல் வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் பங்கேற்றனர்கள். 38,000 இலவச உண்டியல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கி மாணவர்களை சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த இந்நிகழ்வு நடத்தப்பட்டது. அறிவு மற்றும் சிந்தனைகள் மற்ற விலங்குகளையும் மனிதனையும் பிரித்து காட்டுகிறது. அறிவும் சிந்தனையும் தானாக வருவதில்லை மனிதன் ஒவ்வொரு கட்டங்களிலும் படித்து, ஆராய்ந்து தெரிந்து கொள்வதுதான் அறிவாகும். அறிவும், சிந்தனையும் புத்தகத்தின் படிப்பதன் மூலம் தான் கிடைக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இவ்விழாவில் 126 புத்தக அரங்குகளும், 115 புத்தக பதிப்பகங்களும் இடம் பெற்றுள்ளன.

புத்தகத் திருவிழாவில், 29.08.2025 அன்று காலை 10.30 மணிக்கு பெருங்கவிக்கொ வா.மு.சேதுராமன் நினைவு மேடை, முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 12.30 வரை ஓவியப் பயிற்சி, பிற்பகல் 03.00 முதல் பிற்பகல் 04.00 வரை சிலம்பம், மதியம் 2 மணிக்கு உலகத் திரைப்படம், மாலை 5 மணிக்கு கலைநிகழ்ச்சிகள், இரவு 7 மணிக்கு உ.வே.சா.சிந்தனையரங்கம், 30.08.2025 அன்று காலை 10.30 மணிக்கு திரைக்கலைஞர் டெல்லிகணேஷ் நினைவு மேடை, முற்பகல் 11.30 முதல் 12.30 வரை கதை சொல்லல், பிற்பகல் 03.00 முதல் 04.00 வரை பம்பரம், மதியம் 02.00 மணிக்கு உலகத்திரைபடம், மாலை 05.00 மணிக்கு கலைநிகழ்ச்சிகள், இரவு 7 மணிக்கு உ.வே.சா.சிந்தனையரங்கம், 31.08.2025 அன்று காலை 10.30 மணிக்கு இசைக்கலைஞர் உஸ்தாத் ஜாகிர்உசேன் நினைவு மேடை, பிற்பகல் 11.30 முதல் பிற்பகல் 12.30 வரை வண்ணம் தீட்டுதல், பிற்பகல் 03.00 முதல் பிற்பகல் 04.00 மணி வரை கோ-கோ, மதியம் 2 மணிக்கு உலகத்திரைப்படம், மாலை 05.00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், இரவு 7 மணிக்கு உ.வே.சா.சிந்தனையரங்கம், 01.09.2025 அன்று காலை 10.30 மணிக்கு நாட்டுப்புற இசைக்கலைஞர் கொல்லங்குடி கருப்பாயி நினைவு மேடை, பிற்பகல் 11.30 முதல் பிற்பகல் 12.30 வரை கதை சொல்லல், பிற்பகல் 03.00 முதல் பிற்பகல் 04.00 மணி வரை சிலம்பம், மதியம் 2 மணிக்கு உலகத்திரைப்படம், மாலை 05.00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், இரவு 7 மணிக்கு உ.வே.சா.சிந்தனையரங்கம், 02.09.2025 அன்று காலை 10.30 மணிக்கு ஓவியர் மாயா நினைவு மேடை, காலை 11.30 மணிக்கு கவிஞர் ஜெயதேவன் நினைவு மேடை, பிற்பகல் 11.30 முதல் பிற்பகல் 12.30 வரை ஓவிய பயிற்சி, மதியம் 02.00 மணிக்கு உலக திரைப்படம், பிற்பகல் 03.00 முதல் பிற்பகல் 04.00 மணி வரை பம்பரம்,மாலை 05.00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், இரவு 7 மணிக்கு உ.வே.சா.சிந்தனையரங்கம், 03.09.2025 அன்று காலை 10.30 மணிக்கு அறிவியல் இயக்க முன்னாள் தலைவர் அ.வள்ளிநாயகம் நினைவு மேடை, பிற்பகல் 11.30 முதல் பிற்பகல் 12.30 வரை வண்ணம் தீட்டுதல், மதியம் 02.00 மணிக்கு உலகத்திரைப்படம், பிற்பகல் 03.00 முதல் பிற்பகல் 04.00 மணி வரை கோ-கோ, மாலை 05.00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், இரவு 7 மணிக்கு உ.வே.சா.சிந்தனையரங்கம், 04.09.2025 அன்று காலை 10.30 மணிக்கு பாடகர் ஜெயச்சந்திரன் நினைவு மேடை, பிற்பகல் 11.30 முதல் பிற்பகல் 12.30 வரை கதை சொல்லல், மதியம் 02.00 மணிக்கு உலகத்திரைப்படம், பிற்பகல் 03.00 முதல் பிற்பகல் 04.00 மணி வரை சிலம்பம், மாலை 05.00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், இரவு 7 மணிக்கு உ.வே.சா.சிந்தனையரங்கம், 05.09.2025 அன்று காலை 10.30 மணிக்கு கல்வியாளர் வசந்திதேவி நினைவு மேடை, பிற்பகல் 11.30 முதல் பிற்பகல் 12.30 வரை ஓவியப்பயிற்சி, மதியம் 02.00 மணிக்கு உலகத்திரைப்படம், பிற்பகல் 03.00 முதல் பிற்பகல் 04.00 மணி வரை சிலம்பம், மாலை 05.00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், இரவு 7 மணிக்கு உ.வே.சா.சிந்தனையரங்கம், 06.09.2025 அன்று காலை 10.30 மணிக்கு திரைக்கலைஞர் எழுத்தாளர் ராஜேஸ் நினைவு மேடை, பிற்பகல் 11.30 முதல் பிற்பகல் 12.30 வரை வண்ணம் தீட்டுதல், மதியம் 02.00 மணிக்கு உலகத்திரைப்படம், பிற்பகல் 03.00 முதல் பிற்பகல் 04.00 மணி வரை சிலம்பம், மாலை 05.00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், இரவு 7 மணிக்கு உ.வே.சா.சிந்தனையரங்கம், 07.09.2025 அன்று காலை 10.30 மணிக்கு பாடகர் கரிசல்குயில் கிருஷ்ணசாமி நினைவு மேடை, மாலை 05.00 மணிக்கு கலைநிகழ்ச்சிகள், பாராட்டும்… பரிசளிப்பும்… நிகழ்ச்சியில் தலைமைச் செயல் அலுவலர் திரு.மாறன் நாகராஜன் அவர்கள் பாராட்டி, பரிசு வழங்கி சிறப்புரையாற்ற உள்ளனர்.

புத்தகத் திருவிழாவில் 07.09.2025 அன்று இரவு 7.00 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் விழா நிறைவுப் பேருரை, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் விழா சிறப்புரை ஆற்றவுள்ளனர். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர் முனைவர் பொன்முத்துராமலிங்கம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ப.உஷா, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் திரு.செந்தில்முருகன், மாவட்ட நூலக அலுவலர் திரு.சரவணக்குமார், திண்டுக்கல் இலக்கியக் களம் தலைவர் முனைவர் ரெ.மனோகரன், செயலாளர் எழுத்தாளர் திரு.ச.இராமமூர்த்தி, நிர்வாக செயலாளர் திரு.கண்ணன், பொருளாளர் திரு.மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.