Close

Collector – GDP

Publish Date : 12/01/2026

செ.வெ.எண்:-30/2026

நாள்:-12.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.01.2026) நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமைதோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 274 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பழனி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி பயனாளி திரு.தங்கராஜா அவர்கள் தமிழ்நாடு சிறுதானிய இயக்க திட்டத்தின்கீழ் ரூ.24,21,065/- மதிப்பீட்டில் இயந்திரங்களை நிறுவி சிறுதானிய முதன்மைபதப்படுத்தும் மையம் அமைத்துள்ளார். அவரது சிறுதானிய முதன்மைபதப்படுத்தும் மையத்தினை மாவட்ட அளவிலான வேளாண் கொள்முதல் குழு 15.12.2025 அன்று ஆய்வு செய்து குழுவினரால் ஒப்புதல் வழங்கப்பட்டு ஆணையர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சென்னை அவர்களுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட்டது. ஆணையர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சென்னை அவர்களின் செயல்முறை ஆணைகளின்படி முதல் தவணை 60 சதவீதம் மானியம் ரூ.10,89,479/- மதிப்பீட்டில் பெறுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.ம.சுந்தரமகாலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.