Close

Collector inspection – palani

Publish Date : 30/07/2025
.

செ.வெ.எண்:-98/2025

நாள்:-29.07.2025

திண்டுக்கல் மாவட்டம்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவை சார்பில் செயல்பட்டு வரும் மனநல காப்பகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவை சார்பில் புது தாராபுரம் சாலையில் செயல்பட்டு வரும் மனநல காப்பகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(29.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவை சார்பில் மனநல காப்பகம் புது தாராபுரம் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற பொதுமக்கள் மீட்டெடுக்கப்பட்டு, மறுவாழ்வு பயிற்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயிற்சி மையத்தில் ஆண்கள் 44, பெண்கள் 43 நபர்கள் மறுவாழ்வு பயிற்சி எடுத்து வருகின்றனர். இதில் தையல் பயிற்சி மற்றும் சமையல் செய்ய உதவி செய்தல் பழைய செய்தித்தாளில் கவர் செய்தல், கடல் பாசியில் மாலை செய்தல், யோகா, உடற்பயிற்சி, வயர்கூடை செய்தல் போன்ற வேலைகள் செய்து வருகின்றனர். இந்த பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் வரும் பணம் அவரவர் வாங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு மாதம் இருமுறை மனநல மருத்துவர், வாரம் ஒருமுறை பொதுநல மருத்துவர் நேரில் வந்து ஆலோசனை செய்து மாத்திரை மற்றும் மருந்துகள் பரிந்துரை செய்கின்றனர். இதில் மனநிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்தவரை அவரது குடும்பத்தினரை அடையாளம் கண்டு மனநலம் பற்றியும் மாத்திரைகள் பற்றியும் அவரது குடும்பத்தினருக்கு எடுத்துரைக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்தெரிவித்தார்.

தொடர்ந்து பழனி அடிவாரத்தில் கோடைகால நீர்த்தேக்கத்தொட்டி, புளியமரத்து செட் முதல் பழனி அடிவாரம் வரை குடிநீர் குழாய் அமைத்தல் பணிகள் ரூ.9.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, வரதமாநதி அணையில் தண்ணீர் இருப்பு, மதகுகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், செயற்பொறியாளர்(நங்காஞ்சியாறு) திரு.பாலமுருகன் மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.