Close

Collector Inspection-scheme work-Vedasandur Union

Publish Date : 29/03/2025
.

செ.வெ.எண்:-78/2025

நாள்:-28.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

வேடசந்துார் ஊராட்சி ஒன்றியம், இ.சித்துார் ஊராட்சியில் உள்ள நரிக்குறவர் காலனியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மக்களின் தேவைகளை கேட்டறிந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் ஊராட்சி ஒன்றியம், இ.சித்துார் ஊராட்சியில் உள்ள நரிக்குறவர் காலனியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(28.03.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அங்கு வசிக்கும் மக்களின் தேவைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேடசந்துார் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இ.சித்துார் ஊராட்சியில் உள்ள நரிக்குறவர் காலனி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு வசிக்கும் 31 குடும்பங்களுக்கு வருவாய்த்துறை மூலம் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த பட்டா நிலங்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை மூலம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு இன்று கள ஆய்வு செய்யப்பட்டது. சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்கு வசிக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மகளிர் திட்டத்தின் மூலம் சுய உதவிக்குழுக்கள் அமைத்து, அவர்கள் சுயதொழில் தொடங்கிட உரிய பயிற்சி மற்றும் வங்கிக் கடனுதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளியூர்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்து இங்கு வசிக்கும், குழந்தைகளை கண்டறிந்து அவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் சென்று கல்வி பயிலவும், 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த சிறார்களை உயர்கல்வி பயிலவும், தொழிற்கல்வி பயிலவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, வேடசந்துார் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சரவணன், திரு.குமரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.