Collector Inspection- (Vadamadurai Union)

செ.வெ.எண்:- 10/2025
நாள்:03.04.2025
திண்டுக்கல் மாவட்டம்
வடமதுரை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(03.04.2025) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.
வடமதுரை ஊராட்சி ஒன்றியம், மோர்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்குப் பள்ளி உட்கட்டமைப்ப மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.34.23 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பள்ளி கட்டடம் கட்டும் பணிகள், ராமன்செட்டிகுளத்தில் விவசாயத்திற்கு வண்டல் மண் எடுக்கும் பணிகள், சுக்காம்பட்டி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டுமான பணிகள், சுக்காம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட பயணியர் நிழற்குடை, சுக்காம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நபார்டு வங்கி நிதியில் ரூ.35.60 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 2 கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகள் ஆகிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அய்யலூர் பேரூராட்சியில் வேளாண்மைத்துறையின் சார்பில் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் நுண்ணீர் பாசனத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.
அதனைத்தொடர்ந்து, தென்னம்பட்டி ஊராட்சியில் PMFME-கீழ் மகளிர் சுய உதவிக்குழுகள் சார்பில் நடைபெற்று வரும் பொறி தயாரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். மேலும், தென்னம்பட்டி நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் இருப்பு, அரிசி, பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

.

.
மேலும், மேட்டுப்பட்டி ஊராட்சியில் முதலமைச்சர் மருத்தகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டியிருந்த மருந்துகளின் இருப்பு மற்றும் விற்பனை பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, அய்யலூர் பேரூராட்சியில் ளோண்மைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கம் பதிவு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, வேடசந்தூர் வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர், மாவட்ட ஊராட்சி செயலர் திரு.ஜெயசந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திரு.கண்ணன், வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி கீதா உட்பட பலர் உள்ளனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.