Close

DADWO – PCR Awareness

Publish Date : 30/10/2024

செ.வெ.எண்:-73/2024

நாள்:29.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த புகார்களை 18002021989 அல்லது 14566 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி பதிவு செய்யலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 2023 – 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கையின்போது “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த புகார் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், தமிழகத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பாக தகவல் தெரிவிப்போர் வழக்குப்பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடர்பான முறையீடுகளை தொலைபேசி எண்கள் : 18002021989 அல்லது 14566 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக அலுவலக நாட்களில் அலுவலக பணி நேரத்தில் புகார்களை பதிவு செய்யலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.