Close

Development Works – Collector Inspection (Oddanchatram)

Publish Date : 23/01/2026
.

செ.வெ.எண்: 65/2026

நாள்: 22.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (22.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ரூ.6,623.85 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 480 வீடுகளின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கட்டிடப் பொறியாளர்களிடம் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தபோது, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தற்போது வரை 52 சதவிகிதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து, கட்டிடப் பணியில் ஈடுபட்டு வரும் கட்டிடப் பணியாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விருப்பாட்சியில் கலைஞர் மறுவாழ்வு முகாம் திட்டத்தின் கீழ், கட்டப்பட்டு வரும் 80 வீடுகளின் கட்டுமானப் பணிகளையும், பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடத்தின் கட்டுமானப் பணியினையும் மற்றும் சத்துணவுத் திட்டத்தின் கீழ் விருபாட்சி கஸ்தூரி ரெட்டியார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ரூ.10.90 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ள சத்துணவு தயாரிக்கும் கூடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, இப்பள்ளியில் மதிய உணவு தயாரிக்கும் கூடத்தினை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் குறித்து உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு எடுத்துரைத்தார்.

.

.

பின்னர், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், காப்பிளியப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொசவப்பட்டியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நியாய விலைக் கடையில் ரேசன் பொட்களின் விநியோகம் மற்றும் இருப்பு குறித்து பணியாளர்களின் கேட்டறிந்தார். தொடர்ந்து, பொதுமக்களிடம் ரேசன் பொருட்கள் சரியான முறையில் வழங்கப்படுவது குறித்தும்இ ரேசன் பொருட்களின் தரம் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், காப்பிளியபட்பட்டியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து இதுவரை வழங்கப்பட்டுள்ள கறவை மாடுகள் கடனுதவி மற்றும் தங்க நகைக் கடன் கடனுதவி குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார். பணியாளர்களிடம் பொதுமக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டதற்கான பராமரிப்பு பதிவேட்டினை பெற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு தகுதியின் அடிப்படையில் கடனுதவிகள் பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்பிளிகையில் 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.32.07 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் கட்டுமானப் பணியினையும் மற்றும் அம்பிளிகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.29.70 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடத்தின் கட்டுமானப் பணியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

.

.

மேலும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்பிளிகையில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், நியாய விலைக் கடையில் பணியாற்றும் பணியாளர்களிடம் ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டதற்கான பராமரிப்பு பதிவேட்டினை பெற்று பொதுமக்களுக்கு சரியான முறையில் ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார். பின்னர், அம்பிளிகையில் செயல்பட்டு வரும் குழந்தை நல மையத்தினை (அங்கன்வாடி) ஆய்வு செய்து, குழந்தைகளின் வருகை குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையர் திருமதி.சுவேதா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.காமராஜ், நிர்வாகப் பொறியாளர் திரு.த.குபேந்திரன், உதவி நிர்வாகப் பொறியாளர் திருமதி.ப.சுதா, உதவி பொறியாளர்கள் திருமதி.அ.திவ்யாலெட்சுமி மற்றும் திரு.வி.ரியோஜோன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.