Dic Dept – Notification
செ.வெ.எண்:-41/2025
நாள்:-15.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
“தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்” குறித்து சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பெண்களுக்கான கடன் திட்டமான “தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்” குறித்து சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடத்த ஆணையிட்டுள்ளது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 18.12.2025 வியாழக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாலை 2 மணியளவில் பெண்கள் வருகை புரிந்து தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் தொழில் துவங்குவதற்கு வங்கிக் கடன் கோரி விண்ணப்பிக்கும் பொருட்டு, சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
இவ்முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள், மற்றும் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து கடன் ஒப்புதல் ஆணை வழங்க உள்ளதால் வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில் துவங்க ஆர்வமுள்ள பெண்கள் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிசான்றிதழ், கல்வி தகுதிக்கான சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், பான் அட்டை, துவங்க உள்ள தொழிலுக்கான விலைப்பட்டியல், ஆகியவற்றின் அசல் மற்றும் இரட்டை நகல்களுடன் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் பெண்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.