Close

District Level Legal Services mega Camp

Publish Date : 27/11/2024
.

செ.வெ.எண்:-72/2024

நாள்:27.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட அளவிலான சட்ட விழிப்புணர்வு மாபெரும் முகாம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு திருமதி அ.முத்துசாரதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மண்டபத்தில், திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட அளவிலான சட்ட விழிப்புணர்வு மாபெரும் முகாம் இன்று(27.11.2024) நடைபெற்றது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு திருமதி அ.முத்துசாரதா அவர்கள் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு திருமதி அ.முத்துசாரதா அவர்கள் பேசியதாவது:-

மக்களுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை. அனைத்து மக்களுக்கும் சேவைகள் போய் சேர வேண்டும் என்ற நோக்கத்துடனே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது வசதி இல்லாதவர்களுக்கு இன்று தமிழ்நாடு Legal Services Authority என்று சொல்லக் கூடிய இலவச சட்ட உதவி மையம் மாவட்ட நீதிமன்றத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் கட்டணம் கிடையாது. சட்டம் சார்ந்த உதவிகள் அனைத்திற்கும் இங்கு கட்டணம் கிடையாது. கட்டணங்களை அரசே ஏற்றுக் கொள்ளும். முதல் நோக்கி நீங்கள் கொடுக்கும் மனுவிற்கு எதிர் தரப்பையும் அழைத்து வைத்து பேசப்படும். இரு தரப்பினருக்கும் இடையே உள்ள பிரச்சனை சரி செய்ய முடியுமா என்று பார்க்கப்படும். அதுவும் முடியவில்லை, வேறு வழியே இல்லையென்றால் யார், புகார் கொடுத்தார்களோ அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு நீதி மன்றமே இலவச வழக்கறிஞர் வைத்து கொடுக்கப்படும்.

வசதி வாய்ப்பு இல்லாதஎ பலர் அவர்களுடைய நியாயமான உரிமையை பெறுவதற்கு போராடவேண்டியதாக உள்ளது. காசு கொடுக்க முடியவில்லை என்ற நிலையே இன்று மாற்றப்பட்டுவிட்டது.

Here we are the One Stop Centre உங்களுக்கு என்ன வேண்டும்? முதியோர் தொகையா?, மூன்று சக்கர வாகனமா?, இலவசவீட்டுமனையா?, எங்களிடம் மனு கொடுக்கும் நிலையில் அந்தமனு அதன் தொடர்புடைய துறைகளுக்கு மாற்றுதல் செய்யப்பட்டு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும். அதில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு பெறும் பங்கு உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்து பரிசீலனை செய்து வருகிறார். இன்று ஒரு மனு கூட நிலுவையில் இல்லை என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

சட்ட உதவி மட்டுமல்ல, எல்லாவிதமான மக்களுக்கான சேவைகளும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கில் எல்லாதுறைகளும் ஒரே இடத்தில் இன்று சங்கமம் ஆகியுள்ளது. சமூகநலத்துறை, வருவாய்துறை, மாவட்டகுழந்தைகள் பாதுகாப்புதுறை, கல்வித்துறை, உணவுபாதுகாப்புத்துறை, வனத்துறை, மாவட்டசட்டப்பணிகள் ஆணைக்குழு, விவசாயத்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ,திண்டுக்கல் மாநகராட்சி,தொழிலாளர், நலத்துறை, ஆகிய 12 துறைகள் இன்று இந்த திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக நடத்தப்படும் இந்த மெகா சங்கமத்தில் ஒன்றிணைந்துள்ளனர்.

அது மட்டுமல்ல ஒவ்வொரு மாதமும், எங்கள் திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று, Drug addict Awareness Programme, Anti Ragging Awareness Programme, Awareness regarding Transgender,Empowerment Programme ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. தன்னார்வளர்கள், சமுதாயத்தை சீர்படுத்த வேண்டிய இடங்களை எங்களது கவனத்திற்கு கொண்டு வரும் நிலையில் அவை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதி கூறுகிறோம். அதற்கு எடுத்துக்காட்டாக அபிராமிஅம்மன் கோவில் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மதில் சுவாரில் அவை சாரி செய்யப்பட்டுள்ளது.

இந்த சங்கமத்தின் நோக்கமே அரசுத்துறைகளுக்கும், மக்களுக்கும் இடையிலான பாலத்தை உருவாக்குவதே ஆகும். நாங்கள் சேவை செய்யதயாராக இருக்கிறோம். மக்கள் சலுகைகளை பெறதயாராக இருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான பாதையை உருவாக்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். எனவே தான் தன்னார்வளர் தொண்டர்களான NGO, Self Help Groups>Advocate இன்று குறிப்பாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஏனெனில் இவர்கள் மூலமாக அவரவர் கிராமங்களுக்கு இந்த சேவைகள் போய் சேரும் அனைத்து மக்களும் பயன்பெறுவார்கள் என்ற நோக்கத்தில் தான் இந்த மெகா சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி வெற்றிபெற உதவியாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு திருமதி அ.முத்துசாரதா அவர்கள் பேசினார்.

இம்முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள்,பேசியதாவது:-

ஒவ்வொரு திங்கள் கிழமையிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் 3 வது புதன் கிழமை உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அது போக மனுநீதி நாள் என்று சொல்லப்படும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் மாவட்டத்தில் ஒரு புதன் கிழமை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வெரு மாதமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத்தீர்க்கும் நாள் என பல்வேறு குறைத்தீர்க்கும் நிகழ்வாக மக்களை சந்தித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று, அந்த மனுக்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா என பரிசீலினை செய்யப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வு கூட்டம் மூலமாக எந்த ஒரு மனு ஆட்சியர் அலுவலகம் மற்றும் சார்நிலை அலுவலகத்தில் பெற்றாலும் அதை குறிப்பிட்ட காலத்தில் அம்மனு ஏற்பு செய்துள்ளார்களா அல்லது உரிய காரணத்தினை குறிப்பிட்டு நிராகரிக்கப்ட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இது போன்று திங்கள் கிழமை மக்கள் குறைத்தீர்க்கும நாள் கூட்டம், புதன் கிழமை மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம், உங்களை தேடி உங்கள் ஊரில் ஒவ்வொரு மாத்தில் 3-வது புதன் கிழமையில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த நாளில் ஒரு குறிப்பிட்ட தாலுகாவினை தேர்வு செய்து அத்தாலுகா முழுவதும் மாவட்ட நிலை அலுவலர்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து அனைத்து துறை சார்பாக அத்தாலுகாவில் எந்த பணிகள் நடைபெற்று வருகிறது, மக்களுடைய குறைகள் என்ன என்று அறிந்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று அனைத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற நிகழ்வில் அனைத்து துறைகள் சார்ந்த குறைகளை மனுக்களை பெற்று அத்துறை சார்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோல் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளியில் படித்து, கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம் முதல் கல்லூரி படிப்பு முடிக்கின்ற வரையில் பெண்களுக்கு புதுமை பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தில் இதே போல் மாதம் ரூ.1000 மாணவர்கள் வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளியில் படிக்கின்ற குழந்தைகளுக்கு தமிழ் நாடு அரசு மிதிவண்டி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ துறையில் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் 48 ஆகிய சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, குடிசையில்லா தமிழ்நாடு என்ற சீரிய நோக்கத்தின் அடிப்படையில் 6 வருட காலத்தில் தமிழ்நாட்டில் குடிசை இருக்க கூடாது அடிப்படையில் முதற்கட்டமாக குடிசை இல்லா திண்டுக்கல் என்ற நோக்கத்தின் அடிப்படையில் 6125 கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ஊரக பகுதியில் உள்ள மக்களுக்க பழுதான வீடுகளை பழுது பார்ப்பதற்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது போன்ற தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்படுகின்ற அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.

இம்முகாமில், பொதுமக்கள் சட்டம் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிறப்பாக அமைக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அங்கிற்கும் முதல் பரிசும், ஊரக வளர்ச்சித்துறைக்கு இரண்டாம் பரிசும், வருவாய்த்துறைக்கு மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், வருவாய்த்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு பட்டாவும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு விவசாய உரங்கள் மற்றும் விதைகள், உணவு பொருள் மற்றும் வழங்கல் துறையின் சார்பில் 1 பயனாளிகளுக்கு குடும்ப அட்டையும், வனத்துறையின் சார்பில் 700 பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் ஆகிய நலத்திட்ட உதவிகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு திருமதி அ.முத்துசாரதா அவர்கள் வழங்கினார்.

இம்முகாமில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் / சார்பு நீதிபதி திருமதி D.திரிவேணி அவர்கள், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு.R.கனகராஜ் அவர்கள், திண்டுக்கல் வருவாய் கேட்டாட்சியர் திரு.சக்திவேல், வட்டாட்சியர்(மேற்கு) திரு.ஜெயபிரகாஷ், சமூக நல அலுவலர் திரு.புஷ்பகலா, வழக்கறிஞர்கள், அனைத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.