Close

District Munsif-cum-Judicial Magistrate Court Inauguration (VC)

Publish Date : 24/11/2025
.

செ.வெ.எண்:-86/2025

நாள்:-19.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

குஜிலியம்பாறையில் புதிதாக அமையப் பெற்ற நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு. தலைமை நீதியரசர் திரு.மணிந்திரமோகன் ஸ்ரீவத்சவா அவர்கள் தலைமையேற்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுக்காவில் புதிதாக அமையப்பெற்ற மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற (District Munsif-cum-Judicial Magistrate Court) திறப்பு விழா இன்று (19.11.2025) காணொளி வாயிலாக திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி.A.முத்துசாரதா, அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். குஜிலியம்பாறையில் புதிதாக அமையப் பெற்ற நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு. தலைமை நீதியரசர் திரு.மணிந்திரமோகன் ஸ்ரீவத்சவா அவர்கள் தலைமையேற்று, காணொளி வாயிலாக திறந்து வைத்து, தலைமை உரையாற்றினார்.

இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் திரு.P.வேல்முருகன், திரு.N.ஆனந்த் வெங்கடேஷ், திரு.கிருஷ்ணன் ராமசாமி, Dr.R.N.மஞ்சுளா மற்றும் திரு.K.K.ராமகிருஷ்ணன் ஆகியோர் காணொளி வாயிலாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலிருந்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். விழாவின் முடிவில் திருமதி.V.தீபா, தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நடுவர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார் .

இவ்விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மரு.பிரதீப், இ.கா.ப., வேடசந்தூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திரு.P.முருகேசன் மற்றும் செயலாளர் திரு.R.பாலமுருகன், திண்டுக்கல் மாவட்டத்திலூள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.