Close

District Sports Officer Dindigul (STAR ACADEMY)

Publish Date : 12/04/2025

செ.வெ.எண்:-37/2025

நாள்:-11.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

ஸ்டார் அகாடாமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் சார்பில் இறகுப்பந்து பயிற்சிக்காக பயிற்றுநர் தேர்வு மற்றும் இறகுப்பந்து பயிற்சியில் சேர்வதற்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் 2024-25 ஆம் ஆண்டிற்கான மான்ய கோரிக்கையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் இயங்கிவரும் 38 மாவட்டங்களிலும் ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் (STAR ACADEMY) வெவ்வேறு விளையாட்டுக்களுக்கு அமைத்திட அறிவிக்கப்பட்டதின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு இறகுப்பந்து விளையாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேற்காணும் திட்டத்தின் வழிகாட்டுதலின்படி, இறகுப்பந்து பயிற்சிக்காக ஒரு பயிற்றுநர் நியமிக்கப்பட உள்ளது. மேற்கண்ட திட்த்தின்கீழ் பயிற்சியாளரை தற்காலிகமாக நியமிக்கவும், மாதத்திற்கு ரூ. 25,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது

50 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேசிய விளையாட்டு நிறுவனம் (அ) இந்திய விளையாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட முதுநிலை விளையாட்டு பயிற்சி சான்றிதழ் (அல்லது) ஒரு வருட டிப்ளமோ / சான்றிதழ் பயிற்சி (10 மாதங்களுக்கு குறைவாக இருத்தல் கூடாது) (அல்லது ) தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைககழகத்தில் முதுநிலை டிப்ளமோ ( விளையாட்டு) (அல்லது) சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் நடத்தப்பட்ட உரிமம் படிப்பு (License Course) (அல்லது) நேதாஜி சுபாஷ் விளையாட்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட 6 வார சான்றிதழ் படிப்பு படித்தவராக இருத்தல் வேண்டும்.

மேற்காணும் திட்டத்தின்கீழ் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வந்து நேரடியாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.04.2025 அன்று மாலை 5.00 மணி வரை. விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத் தேர்வு 25.04.2025 அன்று காலை 7.00 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. உடற் திறன், விளையாட்டுத் திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின்அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

மேலும், இறகுப்பந்து பயிற்சிக்கான மாணவ, மாணவிகள் தேர்வு திட்டத்தின்கீழ் ஸ்டார் அகாடமி இறகுப்பந்து பயிற்சியில் சேர்வதற்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு 28.04.2025 அன்று காலை 7.00 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் நேரடியாக கலந்து கொள்ளலாம். விளையாட்டில் ஆர்வமுடைய 12 முதல் 21 வயது வரை உள்ள வீரர், வீராங்கனைகள் தேர்வில் கலந்து கொள்ளலாம். 20 மாணவர்கள், 20 மாணவிகள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதத்தில் 25 நாட்கள் தொடர்ப யிற்சி வழங்கப்படும். பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்புரோடு, திண்டுக்கல். என்ற முகவரியிலும், 7401703504 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.