Close

District Supply Office – (Pongal Gift 2026 )

Publish Date : 06/01/2026

செ.வெ.எண்:-10/2026

நாள்: 06.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகின்ற 2026-ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்புடன் ரொக்கத் தொகை ரூ.3000/-ம் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் வழங்க தமிழக அரசால் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி பொங்கல் 2026-ம் ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்புகள் பெறுவதில் புகார்கள் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் அதனை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0451-2460097 என்ற எண்ணிற்கும், மாநில அளவில் புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களிலும் சென்னை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 044-28592828 என்ற தொலைபேசி எண்ணிலும் குடும்ப அட்டைதாரர்கள் தெரிவிக்கலாம்.

தகுதியுள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்பட உள்ளதால், குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் நியாயவிலைக்கடைக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்புகளைப் பெற்றுக் கொள்ளலாம். நியாயவிலைக்கடைகளில் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படவுள்ள தேதி,காலம்,நேரம் குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்தின்படி நியாயவிலைக்கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத்தொகுப்புகள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப.,அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,திண்டுக்கல்.