Close

Drone cameras have been banned in anticipation of the Honourable Chief Minister’s visit.

Publish Date : 06/01/2026

செ.வெ.எண்:-06/2026

நாள்: 05.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்திற்கு 07.01.2026 அன்று வருகை புரிந்து நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக, 07.01.2026 அன்று காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திண்டுக்கல் மாவட்டத்தில்,ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்படுகிறது.

எனவே, 07.01.2026 அன்று தடையை மீறி திண்டுக்கல் மாவட்டத்தில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.