Close

Election News

Publish Date : 04/12/2025

செ.வெ.எண்:-02/2025

நாள்: 01.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது, மற்றும் தொடர் பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களில் 04.11.2025 முதல் 19,26,478 (99.59%) கணக்கெடுப்பு படிவங்கள் (Enumeration Form) வழங்கப்பட்டுள்ளது.

 மேற்படி படிவங்களில் 15,37,131 (79.46%) படிவங்களை பூர்த்தி செய்து மீளப்பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 தலைமை தேர்தல் அலுவலர் அவர்களின் 30.11.2025 நாளிட்ட கடிதத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

 கணக்கெடுப்பு படிவங்கள் (Enumeration Forms) பூர்த்தி செய்து மீளப்பெற 11.12.2025 கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, கணக்கெடுப்பு படிவங்கள் மீளப்பெறும் பணிகள் எதிர் வரும் 11.12.2025 வரையில் தொடர்ந்து நடைபெறும்.

 திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் கணக்கெடுப்பு படிவங்கள் (Enumeration Forms) பரிசீலிணை செய்து பதிவேற்றம் செய்யப்பட்டவைகளில் வருகையின்மை (Absent), இடம் பெயர்ந்தோர் (Shifted), இறப்பு (Death) மற்றும் கண்டுபிடிக்க இயலாதவை (untraceable) ஆகியவைகளை மேலாய்வு (Super check) செய்திட கீழ்கண்டவாறு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 (வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மறுஆய்வு) BLO recheck 100%
2 (வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள்) BLO Supervisior 50%
3 (உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள்) AERO 25%
4 (வாக்காளர் பதிவு அலுவலர்கள்) ERO 10%
5 (அனைத்து வருவாய்த்துறை கண்காணிப்பு அலுவலர்கள்- தனி வட்டாட்சியர்கள்) All Revenue Nodal Officer 5%

 எந்த ஒரு தகுதியான வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதே இச்சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கம் ஆகும்.

 கணக்கெடுப்பு படிவங்கள் (Enumeration Forms) திரும்ப ஒப்படைக்கப்படாத வாக்காளர்கள் அனைவரும் தங்களது பாகத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தவறாது ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 கணக்கெடுப்பு படிவங்கள் (Enumeration Forms) மீள ஒப்படைக்காத வாக்காளர்கள் தங்களது படிவங்களை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தவறாது பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 11.12.2025 வரையில் வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவம் வழங்காத மற்றும் கணக்கெடுப்பு படிவங்கள் பெறாத வாக்காளர்கள் 16.12.2025 முதல் (செவ்வாய்) 15.01.2026 (வியாழன்) வரையில் தங்களது ஆட்சேபணை மற்றும் கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம்.

 தவறும் பட்சத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் முதல் மேல்முறையீடு அளித்து அதன் மூலம் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதற்கு வழிவகை உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

 மேலும், தலைமை தேர்தல் அலுவலர் அவர்களிடம் இரண்டாம் மேல்முறையீடு செய்வதன் மூலமும் தங்களது உரிமையினை நிலை நாட்டிட வழிவகை உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.