Election News.
செ.வெ.எண்:-11/2025
நாள்: 01.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தொடர் பணிகள் மேற்கொள்வது, வருகையின்மை, இடம் பெயர்ந்தோர், இறப்பு மற்றும் கண்டுபிடிக்க இயலாதவை ஆகியவைகளை மேலாய்வு (Super check) செய்வது குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தொடர் பணிகள் மேற்கொள்வது, வருகையின்மை, இடம் பெயர்ந்தோர், இறப்பு மற்றும் கண்டுபிடிக்க இயலாதவை உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்கள், உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுக்கு மேலாய்வு (Super check) செய்வது குறித்து ஆய்வுக்கூட்டம் இன்று (06.12.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களில் 04.11.2025 முதல் 19,32,606 (99.90%) கணக்கெடுப்பு படிவங்கள் (Enumeration Form) வழங்கப்பட்டுள்ளது. மேற்படி படிவங்களில் 15,81,844 (81.77 %) படிவங்களை பூர்த்தி செய்து மீளப்பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு படிவங்கள் (Enumeration Forms) பூர்த்தி செய்து மீளப்பெற 11.12.2025 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே. கணக்கெடுப்பு படிவங்கள் மீளப்பெறும் பணிகள் எதிர் வரும் 11.12.2025 வரையில் தொடர்ந்து நடைபெறும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் கணக்கெடுப்பு படிவங்கள் (Enumeration Forms) பரிசீலனை செய்து பதிவேற்றம் செய்யப்பட்டவைகளில் வருகையின்மை (Absent), இடம் பெயர்ந்தோர் (Shifted), இறப்பு (Death) மற்றும் கண்டுபிடிக்க இயலாதவை (untraceable) ஆகியவைகளை மேலாய்வு (Super check) செய்திட நியமிக்கப்பட்ட அலுவலர்களின் பணி முன்னேற்றம் குறித்து இன்றைய தினம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. எந்த ஒரு தகுதியான வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே இச்சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கம் ஆகும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வருகையின்மை (Absent), இடம் பெயர்ந்தோர் (Shifted), இறப்பு (Death) மற்றும் கண்டுபிடிக்க இயலாதவை (untraceable) ஆகியவைகளை மேலாய்வு (Super check) செய்வதற்கு வாக்குச்சாவடி நிலை முகவர்களின் (BLA-2) உதவியுடன் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.