Close

Election – News

Publish Date : 30/12/2025

செ.வெ.எண்:-74/2025

நாள்:-28.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கைச் செய்தி

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. வாக்காளர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (claims and objections) 19.12.2025 முதல் 18.01.2026 வரையில் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பெறப்பட்டு வருகின்றது. சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் தொடர் பணியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 01.01.2026-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம் முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 2301 வாக்குச்சாவடி மையங்களிலும் 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய இரண்டு தினங்களும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று கீழ்கண்டவாறு மனுக்கள் பெறப்பட்டன.

District  Total No. of Forms Received
(27.12.2025 and 28.12.2025)
Form 6 Form 6A Form 7 Form 8 Total
Dindigul 23975 0 146 5081 29202

மேலும் பொதுமக்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கு அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் தொடர்ந்து விண்ணப்பங்களை அளிக்கலாம். அத்துடன் மீண்டும் 03.01.2025 (சனி) மற்றும் 04.01.2025 (ஞாயிறு) சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும்.

மேலும், வாக்காளர்கள் இணையவழி (Online) மூலமாக நேரடி விண்ணப்பம் செய்து இந்திய தேர்தல் ஆணையத்தின் www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் “Voters Help Line என்ற கைபேசி செயலி மூலமும் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். மேலும் வாக்காளரின் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை https://electoralsearch.ecl.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் / நீக்கம், முகவரி மாற்றம் / திருத்தம் செய்துகொள்வதற்கு இவ்வாய்பினை முழுமையாக பயன் படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.