Close

Election – Observer – Voter List Meeting and Inspection

Publish Date : 26/12/2025
.

செ.வெ.எண்:-61/2025

நாள்: 24.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026-ன்படி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள விபரம் மற்றும் விடுபட்டுள்ள வாக்காளர்களின் விபரம் குறித்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 மேலிடப்பார்வையாளர் (Observer) திரு.எம்.கோவிந்தராவ்., இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026-ன்படி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள விபரம் மற்றும் விடுபட்டுள்ள வாக்காளர்களின் விபரம் குறித்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (24.12.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 மேலிடப்பார்வையாளர் (Observer) திரு.எம்.கோவிந்தராவ்., இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன். இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் அடங்கியுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கடந்த 04.11.2025 முதல் 16.12.2025 வரையில் கணக்கெடுப்பு படிவங்கள் (Enumeration Form) வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, அப்படிவங்கள் அனைத்தும் பூர்த்தி செய்து மீளப்பெறப்பட்டு, கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் (claims and objections) 19.12.2025 முதல் 18.01.2026 வரையில் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பெறப்பட்டு வருகின்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தினால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 மேலிடப்பார்வையாளர் (Observer) திரு.எம்.கோவிந்தராவ்., இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (24.12.2025) திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. மேற்படி, ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம்-2026-ன்படி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள விபரம் குறித்தும், அதில் விடுபட்டுள்ள வாக்காளர்களின் விபரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களில் (ASDD) என வகைப்படுத்தப்பட்ட இனங்கள் குறித்து 128-ஆத்துார் சட்டமன்ற தொகுதி மற்றும் 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 மேலிடப்பார்வையாளர் (Observer) அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களுடன் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வாக்காளர்களிடம் புதிய வாக்காளர்களை சேர்த்திடுமாறும் 01.01.2026-ஆம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 27.12.2025 (சனி), 28.12.2025 (ஞாயிறு), 03.01.2026 (சனி) மற்றும் 04.01.2026 (ஞாயிறு) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது எனவும், முகாம் நடைபெறும் நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் முகாம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வாக்காளர்கள் இணையவழி (Online) மூலமாக நேரடி விண்ணப்பம் செய்து இந்திய தேர்தல் ஆணையத்தின் www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் “Voters Help Line” என்ற கைபேசி செயலி மூலமும் விண்ணப்பம் செய்து கொள்ளலாம் எனவும், பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல்/நீக்கம், முகவரி மாற்றம் / திருத்தம் செய்வதற்கு இவ்வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.செல்வன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.மூ.திருமலை, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர், ஆத்தூர் வட்டாட்சியர் திரு.முத்துமுருகன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் திரு.செந்தில்முருகன் அவர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.

.

.