Election – SIR 2026 – Electoral Draft Publish
செ.வெ.எண்:-53/2025
நாள்: 19.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
சிறப்பு தீவிர திருத்தம்-2026 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்களின் தகவல்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அடங்கியுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் 16.12.2025 முடிய மொத்தம் 19,34,447 (100%) வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் 16,09,553 (83.20%) கணக்கெடுப்பு படிவங்கள் பூர்த்தி செய்து மீளப்பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவற்றில் 3,24,894-ல் (16.80%) படிவங்கள் நிரந்தர குடிபெயர்ந்தோர் (Permanently Shifted)-144816, இறப்பு (Death)-107991, கண்டறிய இயலாதவர்கள் (Untraceable / Absent)-47783, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவை (Already Enrolled)-20182, மற்றவை (Others)-4122 என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது எந்தவொரு தகுதியான வாக்காளரும் வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்டு விடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதிபாட்டினைப் பின்பற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு முந்தைய கால கட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs), வாக்காளர்களின் வீடுகளுக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை சென்று அணுகிய போதும் தொடர்பு கொள்ள முடியாத வாக்காளர்கள் அதாவது, இறந்தவர்கள்(Death), கண்டறிய இயலாத / முகவரியில் இல்லாத வாக்காளர்கள்(Absent), இடம் பெயர்ந்தவர்கள்(Permanently Shifted), இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள்(Double Entry) என வாக்குச்சாவடி வாரியான பட்டியலை (ASD) தயார் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி நிலை முகவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 பணிகளின் ஒரு பகுதியாக வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது.
இன்று (19.12.2025) வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விபரம் பின்வருமாறு,
| வ. எண் | சட்டமன்ற தொகுதி எண்/பெயர் | வாக்குச் சாவடி எண்ணிக்கை | மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை | |||
| ஆண் | பெண் | இதரர் | மொத்தம் | |||
| 1 | 127-பழனி | 339 | 111081 | 115960 | 49 | 227090 |
| 2 | 128-ஒட்டன்சத்திரம் | 314 | 100926 | 108228 | 2 | 209156 |
| 3 | 129-ஆத்துார் | 341 | 120832 | 129572 | 19 | 250423 |
| 4 | 130-நிலக்கோட்டை | 305 | 104032 | 107740 | 16 | 211788 |
| 5 | 131-நத்தம் | 359 | 122611 | 126352 | 60 | 249023 |
| 6 | 132-திண்டுக்கல் | 316 | 110464 | 117741 | 18 | 228223 |
| 7 | 133-வேடசந்துார் | 327 | 114521 | 119328 | 1 | 233850 |
| மொத்தம் | 2301 | 784467 | 824921 | 165 | 1609553 | |
இன்று வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 2301 வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலினை தவறாமல் பார்வையிட்டு தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த விபரங்களை elections.tn.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரியிலும் சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலும், வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க / பெயர் நீக்கம் செய்ய / பெயர் திருத்தம் முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புவர்கள் பின்வரும் படிவங்களில் 19.12.2025 முதல் 18.01.2026 வரையில் விண்ணப்பங்கள் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு
(31.12.2008 ஆம் தேதி வரை பிறந்தவர்கள்) : படிவம்-6
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்கு : படிவம்-7
பிழைத்திருத்தம், முகவரி மாற்றம் மற்றும்
வாக்காளர் அடையாள அட்டை பெற : படிவம்-8
விண்ணப்பங்கள் அளிக்க வேண்டிய அலுவலகங்கள்
1. சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் (வருவாய் கோட்டாட்சியர்) அலுவலகங்கள்
2. சம்மந்தப்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர் (வருவாய் வட்டாட்சியர் / மாநகராட்சி ஆணையர் / நகராட்சி ஆணையர்) அலுவலகங்கள்.
3. சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள்.
மேலும், வாக்காளர்கள் இணையவழி (Online) மூலமாக நேரடி விண்ணப்பம் செய்து இந்திய தேர்தல் ஆணையத்தின் www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் ‘Voters Help Line’ என்ற கைபேசி செயலி மூலம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல் / இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் சந்கேங்கள் ஏதும் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1950-ல் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.
இன்று (19.12.2025) வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் தொடர்பாக 19.12.2025 முதல் 18.01.2026 வரை வரப்பெறும் கோரிக்கைகள் / ஆட்சேபணைகள் பரிசீலனை செய்யப்பட்டதன் அடிப்படையில் 10.02.2025-க்குள் முடிவு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் 17.02.2026-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
எனவே, பொதுமக்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சரிபார்த்துக் கொள்ளவும், புதிதாக பெயர் சேர்த்தல் / நீக்கம், முகவரி மாற்றம் / திருத்தம் செய்ய விரும்புபவர்கள் இவ்வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.